ஹெல்தி ஹனி மிக்ஸ் தஹி சாலட்!

ருசியோ ருசி!
தஹி சாலட்
தஹி சாலட்Image cedit- youtube.com

சாலட் வகைகளில் இது வித்தியாசமான சுவையில் இருக்கும். சாதாரணமாக செய்து சாப்பிடலாம் ஹனி மிக்ஸ் தஹி சாலட்.

தேவையானவை:

நன்கு சுத்தம் செய்த காலிஃப்ளவர் – 1 (மீடியம் சைஸ்), கேரட் – 3, மிளகு – சீரகத்தூள் – 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன், புளிக்காத கெட்டித் தயிர் – 1½  கப், தேன் – 1 டீஸ்பூன், உப்பு – தேவையானது.

செய்முறை:

முதலில் காலிஃப்ளவர் பூக்களை எடுத்து சுமார் பத்து நிமிடம் சுடு தண்ணீரில் போட்டு எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதைப் பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட்டைத் தோல் சீவி துருவிக்கொள்ளவும்.

வாயகன்ற பேஸின் ஒன்றில், பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர், கேரட் துருவலைப் போட்டு, எலுமிச்சை சாறை விட்டு நன்கு மிக்ஸ் செய்யவும்.

மற்றொரு பாத்திரத்தில் கெட்டித்தயிர், மிளகு – சீரகத்தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கி, ஃப்ளவர் – கேரட் கலவை மீது கொட்டிக் கிளறிவிடவும். இப்போது சாலட் ரெடி.

இதையும் படியுங்கள்:
சிறுவர் கதை - புது சைக்கிள்!
தஹி சாலட்

இதை 4-5 கண்ணாடிக் கோப்பையில் சமமாக போட்டு, மேலே சில தேன்துளிகளைப் பரவலாக விடவும். சுவையாக இருக்கும்.

இவற்றை ஃப்ரிட்ஜினுள் சுமார் ஒரு மணி நேரம் வைத்து பின் வெளியே எடுத்துச் சாப்பிட்டால் மிகவும் டேஸ்ட்டாக இருக்கும். இது ஒரு ஹெல்த்தியான சாலட் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com