ஆரோக்கியம் நிறைந்த குதிரைவாலி அரிசி பொங்கல்!

ஆரோக்கியம் நிறைந்த குதிரைவாலி அரிசி பொங்கல்!
Published on

பொதுவாகவே பொங்கல் உணவை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அதில் போடப்படும் நெய், முந்திரிப் பருப்பு போன்றவற்றால் பொங்கலின் சுவை மேலும் கூடுகிறது. அப்படி இருக்கையில், குதிரைவாலி அரிசி போன்ற ஆரோக்கியமான தானியத்தைப் பயன்படுத்தி பொங்கல் செய்யும்போது பொங்கல் மேலும் சுவையானதாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அள்ளித் தருகிறது.

தேவையான பொருட்கள்: குதிரைவாலி அரிசி - 1 கப், பாசிப்பருப்பு - 50 கிராம், முந்திரி - 10, மிளகு - அரை ஸ்பூன், சீரகம் - 1 ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, நெய் - 5 ஸ்பூன்.

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாய் வைத்து அது நன்றாக சூடானதும் நெய் சேர்த்து மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு, கருவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும். இவை நன்றாக வதங்கியதும் எவ்வளவு குதிரைவாலி அரிசி எடுத்தீர்களோ அதைவிட மூன்று மடங்கு தண்ணீரை கடாயில் ஊற்றவும். 

பின்னர் அது நன்கு கொதித்ததும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். தண்ணீர் கொதிப்பதற்கு முன்பாகவே பாசிப்பருப்பு மற்றும் குதிரைவாலி அரிசியை எடுத்து கழுவிக்கொள்ளவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் கழுவி வைத்த பாசிப்பருப்பையும் குதிரைவாலி அரிசையையும் அதில் சேர்க்கவும். சரியான அளவு தண்ணீர் ஊற்றினால் மட்டுமே நன்றாகப் பொங்கி குழைவான பொங்கல் வரும். சிலருக்கு குழைவாக பொங்கல் இருப்பது பிடிக்காது. அப்போது இரண்டு மடங்கு தண்ணீர் மற்றும் சேர்த்துக் கொள்ளலாம். 

இதை சிறிது நேரம் வேக விடுங்கள். நீங்கள் குக்கரில் பொங்கல் செய்கிறீர்கள் என்றால் 20 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.‌ அனைத்தும் நன்றாக வெந்ததும் நன்கு கிளறிவிட்டு இறக்கினால் சுடச்சுட குதிரைவாலி பொங்கல் ரெடி. 

இதை சாம்பார் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை மேலும் கூடுதலாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com