கடையில் வாங்குவதை விட ஆரோக்கியமான வீட்டு முறை நூடுல்ஸ்!

Healthy noodles!
Healthy noodles!
Published on

கும்மாயத்தில் கருப்பு உளுந்து சேர்த்து இருப்பதால் பருவம் அடைந்த பெண்களுக்கு ஏற்றதாகவும், நூடுல்ஸை குடிசைத் தொழிலாகவும் செய்கிறார்கள். அந்த இடங்கள் சுகாதாரமின்றி இருப்பதை டி வி யில் காண முடிந்தது. அதை தவிர்த்து வீட்டில் எளிமையான முறையில் நூடுல்ஸ் செய்தால் சுகாதாரமாக இருக்கும். அவற்றைப் பற்றிய செய்முறை குறிப்புகள் இதோ. 

கும்மாயம் செய்யும் முறை:

செய்யத்தேவையான பொருட்கள்:

கருப்பு உளுந்து-1கப்

பயத்தம் பருப்பு , பச்சரிசி, தலா- அரை கப்

வெல்லத் துருவல் -ஒரு கப்

நெய்-4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

பருப்பு வகைகள் மற்றும் பச்சரிசி ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்து அதை சலித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத் துருவலை தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து அதில் உள்ள கல் மண்களை எடுத்துவிட்டு வடிகட்டி வைக்கவும். 

சலித்த மாவில் நெய்யை கலந்து அதை வடிகட்டிய வெல்ல நீரில்  சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கெட்டியாகக்கிளறி இறக்கவும். கும் மாயம் ரெடி.

வெஜ் நூடுல்ஸ்

செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு- 1கப்

கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி- வேகவைத்தது ஒரு கப்

நறுக்கிய வெங்காயம்- ஒன்று

பச்சை மிளகாய் -இரண்டு நறுக்கியது

பொடியாக நறுக்கிய மல்லித்தழை- கைப்பிடி அளவு

சிறிதளவு -லெமன் ஜூஸ்

சாம்பார் பொடி -ஒரு டீஸ்பூன்

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
கேரளாவின் நாவூறும் சுவை: கல்யாண வீட்டு இஞ்சிப்புளி!
Healthy noodles!

செய்முறை: 

கோதுமை மாவை வறுத்து அதில் உப்பு, வெந்நீர் ஊற்றி பிசைந்து  பெரிய கண்ணாக உள்ள துளையில் போட்டு பிழிந்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்றாக வதக்கி, வேகவைத்த காய்கறிகளையும் சேர்த்து  சிறிதளவு சாம்பார் பொடி கலந்து மசாலா வாசனை வரும் பொழுது  உப்பு போட்டு, நூடுல்ஸை சேர்த்து கிளரி, லெமன் ஜூஸ், மல்லித்தழை சேர்த்து  உடையாமல் கிளறி இறக்கவும். இந்த வெஜிடபிள் நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். நாமே தயாரிப்பதால் மிகவும் சுகாதாரமானது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com