

பசலைக்கீரை போண்டா
தேவை:
பசலைக் கீரை – 10 இலைகள்
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
ஓமம் - ½ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
செய்முறை:
முதலில் பசலைக்கீரை இலைகளைக் கழுவி துடைத்து எடுத்து வைக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், ஓமம், உப்பு ஆகியவற்றை சிறிது நீர் விட்டுக் கலந்து போண்டா மாவு பதத்தில் கரைத்து வைக்கவும். இந்தக் கலவையில் கழுவி எடுத்து வைத்திருக்கும் பசலைக்கீரை இவைகளைத் தோய்த்து, எண்ணெயில் பொரித்து எடுக்க, சுவையான பசலைக்கீரை போண்டா ரெடி.
பசலைக்கீரை அடை
தேவை:
கம்பு மாவு - 200 கிராம்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
பசலைக் கீரை (பொடியாக நறுக்கியது) - ஒரு கப்
நெய் - ஒரு ஸ்பூன்
தேங்காய் துருவல் - முன்று டீஸ்பூன்
பச்ச மிளகாய் (பொடியாக நறுக்கியது) - ஒன்று
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒன்று
தண்ணீர் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கம்பு மாவை லேசாக வறுத்துக்கொள்ளவும். பின்னர் கம்பு மாவுடன் மேற்கண்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, ஒரு தட்டில் சதுர வடிவ ஈரதுணியை விரித்து அதில் ஒரு உருண்டையை வைத்து உள்ளங்கை அளவிற்கு உள்ள ரொட்டியாக தட்டவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காயவைத்து, சிறிது வெண்ணெய் அல்லது நெய் தடவி, பின் தட்டி வைத்துள்ள ரொட்டியை இட்டு இரண்டுபுறமும் நன்கு சிவக்க வேகவைத்து மீண்டும் லேசாக நெய் தடவி எடுத்து வைக்கவும். கம கம கம்பு பசலைக்கீரை அடை தயார்.
பசலைக்கீரை சாதம்
தேவை:
வெந்த சாதம் – 2 கப்
பசலைக்கீரை – 1 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 3 பல்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு
செய்முறை:
பசலைக்கீரை, பச்சை மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து வேகவைத்து அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அந்த விழுதை வதக்கவும். நன்கு வதங்கியதும் சாதத்தில் கலந்து பரிமாறவும். சுவையான பசலைக்கீரை சாதம் தயார்.
பசலைக்கீரை மசியல்
தேவை:
சுத்தம் செய்த பசலைக்கீரை - 4 கப்
சாம்பார் வெங்காயம் - 1/2கப்
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 5
சீரகம் - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பசலைக் கீரையின் இலைகளை எடுத்து கழுவி வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, கால் கப் சாம்பார் வெங்காயம் சேர்த்து, கொதிக்கும்போது, சுத்தம் செய்துள்ள கீரையை சேர்த்து, கொஞ்சம் வேகவைக்கவும்.
கடாயில் எண்ணை சேர்த்து, சூடானதும் வெங்காயம், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேகும் கீரையில் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் விட்டு, வேறு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம், பூண்டு, வெங்காயம், வற்றல் மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி சேர்த்து கலந்து இறக்கவும்.
சூடேறியவுடன், உப்பு சேர்த்து பருப்பு மத்து வைத்து நன்கு மசிக்கவும். சுவையான பசலைக்கீரை மசியல் ரெடி...
இது சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.