சாதம் சாப்பிட போர் அடிக்குதா? சாமை அரிசியில் 4 புதுவித ரெசிபிகள்!

healthy samayal recipes in tamil
4 New recipes
Published on

சாமை அரிசி பிசிபேளாபாத்

தேவை:

சாமை அரிசி - 1கப் 

துவரம் பருப்பு - 1/2கப்

பெருங்காயம் - சிறிது

பச்சை மிளகாய் -1

கத்தரி,வெண்டை,முள்ளங்கி,அவரை,

முருங்கை,கேரட்,பீன்ஸ்,

குடைமிளகாய்,

உருளை,சேப்பங்கிழங்கு,

பச்சை பட்டாணி அனைத்தும் சேர்த்து 2 கப்.

வெங்காயம் - 2

தக்காளி - 2

மிளகாய்தூள் - 1 ஸ்பூன் 

கரம்மசாலா பொடி - 1/4 ஸ்பூன் 

செய்முறை:

பருப்பை முதலில் 2 விசில் விட்டு வேகவைக்கவும். பின் குக்கரில் எண்ணெய் விட்டு பெருங்காயம், வெங்காயம்,தக்காளி, ப.மிளகாய்,கறிவேப்பிலை, காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி மசாலாதூள்,மி.தூளை சேர்த்து வதக்கி சாமை அரிசி போட்டு வதக்கவும். பின் வேகவைத்த துவரம் பருப்பு, புளி கரைத்து தேவையான அளவு தண்ணீர் வைத்து, 3 விசிலில் இறக்கவும்... 

வாணலியில் நெய்விட்டு கடுகு,  உளுந்து, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, தாளித்துக் கொட்ட, மணக்க மணக்க சாமை அரிசி சாம்பார் சாதம் தயார்...

                      ******

சாமை அரிசி அடை

தேவை:

சாமை அரிசி - 1 கப்

கடலைப்பருப்பு - 1/2 கப்

உளுத்தம்பருப்பு - 1/4 கப் 

மிளகாய் வற்றல் - 5

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - 1/2 அங்குலத்துண்டு 

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப் 

துருவிய கேரட் - 1/4 கப்

தேங்காய்த்துருவல் - 1/4 கப் 

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - 1/4 கப் 

கறிவேப்பிலை - சிறிது 

பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்  

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் 

தேங்காய் எண்ணெய் 

உப்பு - தேவையான அளவு  

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சாமை அரிசி, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து மூன்று முறை நன்றாக கழுவிக் கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு 3 - 4 மணி நேரம் ஊறவைக்கவும். 

தண்ணீரை வடித்துவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்தவற்றை சேர்த்து அதோடு பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், இஞ்சி சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.‌ மிக்ஸி ஜாரை 3/4 கப் தண்ணீர் விட்டு அலசி மாவில் கலக்கவும். பின் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். 

பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்துகொள்ளவும். 

இரும்பு தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைத்து காயவைத்து ஒன்றரைக் கரண்டி மாவை ஊற்றி மெதுவாக தேய்த்து விடவும். அடையின் மேலே 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வேகவிடவும். கீழ் புறம் சிவந்து வெந்ததும் மெதுவாக திருப்பிப் போட்டு மேலும் சில நிமிடங்கள் முறுகலாகும் வரை வேகவைத்து இறக்கவும். 

சுவையான சத்தான சாமை அரிசி அடை ரெடி.

                   ********

சாமை பர்பி

தேவை:

சாமை அரிசி மாவு - 1 கப்,

கன்டன்ஸ்டு மில்க் - அரை கப்,

பசும் பால் - 100 மி.லி,

நெய் - 2 ஸ்பூன்

வெண்ணெய் - 2 ஸ்பூன்

முந்திரி, பாதாம் - தலா 5 (பொடித்தது)

செய்முறை:

கடாயில் நெய் விட்டு குதிரைவாலி மாவை சற்று வறுத்த பின், முந்திரி, பாதாம் பவுடர், பால், கன்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும். நன்றாக சேர்த்து வந்ததும் நெய் சேர்த்து கிளறிவிடவும்.

பால்கோவா பதம் வந்தவுடன் இறக்கி தட்டில் வெண்ணெய் தடவி அதில் ஊற்றி பரவிவிடவும். பத்து நிமிடங்கள் கழித்து,சிறிய துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜ்ஜில் ஒருமணி நேரம் வைத்து எடுக்க,. சுவையான, சத்தான சாமை அரிசி பர்பி ரெடி.

                       ******

 சாமை அரிசி தட்டை முறுக்கு 

 தேவை:

சாமை அரிசி- கால் கிலோ உளுந்து மாவு - 6 ஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன் மிளகாய்தூள் - 10 - 15

எள் - 2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் : 2 சிட்டிகை 

உப்பு, எண்ணெய் :

தேவைக்கேற்ப

செய்முறை:

சாமை அரிசியைக் கழுவி, பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து மாவாக அரைக்கவும். அரைத்தமாவில் மிளகாய் தூள், எள், உளுத்தம் பருப்பு மாவு, நெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். சுத்தமான துணியில் உருண்டைகளாக உருட்டி, வட்டமாக தட்டவும். 2 நிமிடம் காயவைத்து, பின் எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும். சுவையான சாமை அரிசி தட்டை முறுக்கு தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com