இந்த கோடைக்காலத்தில் சரும அழகிற்காகவும், பொலிவிற்காகவும் வெளியே செல்லும்போது பயன்படுத்தும் கிரீம் போன்றவை எவ்வளவு முக்கியமோ அதேபோல சருமத்திற்காக நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிக முக்கியமாகும். இந்த கோடைக்காலத்தை தாக்குப்பிடிக்க கண்டிப்பாக நிறைய நீராகாரம் சாப்பிட வேண்டியது அவசியமாகும். அதிகமாக நம் உடலுக்கு நீர்ச்சத்தே தேவைப்படுகிறது. இன்றைக்கு ஆரோக்கியமான மற்றும் சுலபமாக செய்ய கூடிய இரண்டு ஸ்மூத்தீஸ் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆரோக்கியமான ஆரஞ்ச் நிற ஸ்மூத்தி செய்ய தேவையான பொருட்கள்:
கேரட்-1கப்.
பப்பாளி-1கப்
ஆரஞ்ச்-1 கப்
தக்காளி-1 கப்
தேன்-2 தேக்கரண்டி.
எழுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி.
செய்முறை விளக்கம்:
முதலில் மிக்ஸியில் சின்னதாக வெட்டி வைத்திருக்கும் கேரட் 1கப், ஆரஞ்ச் 1கப், சிறிதாக வெட்டி வைத்த தக்காளி 1கப், பப்பாளி 1கப், தேன் 2 தேக்கரண்டி, எழுமிச்சை சாறு 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைக்கவும். பிறகு ஒரு கண்ணாடி கிளேசில் ஸ்மூத்தியை ஊற்றி தேவையான அளவு ஐஸ் சேர்த்து மேலே அழகுக்காக புதினா இலை வைத்து பரிமாறவும். இப்போது பார்க்கவே கண்ணை கவரக்கூடிய ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும் ஸ்மூத்தி தயார். இது உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானதாகும். நீங்களும் ஒருமுறை வீட்டில் செய்து பார்த்து விட்டு சொல்லுங்க.
வெயிலுக்கு இதமாக மாம்பழ சாகோ ரெசிபி!
தேவையான பொருட்கள்:
சப்ஜி விதை -1 தேக்கரண்டி.
பால்- 1 லிட்டர்.
சக்கரை-1/4 கப்.
மாம்பழம்-1 கப்.
ஜவ்வரிசி-1கப்
ஐஸ்- தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
முதலில் 1 தேக்கரண்டி சப்ஜி விதையை தண்ணீரில் ஊர வைத்துக்கொள்ளவும். இப்போது ஜவ்வரிசி 1 கப்பை தண்ணீரில் ½ மணி நேரம் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். மாம்பழம் 1கப், நன்றாக காய்ச்சி சுண்டிய பால், சக்கரை ¼ கப் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
இப்போது ஒரு தம்ளரில் முதலில் ஊறவைத்த சப்ஜி விதையை போட்டு அதன் மேலே வேகவைத்த ஜவ்வரிசியை 1 தேக்கரண்டி சேர்க்கவும். இதனுடன் அரைத்து வைத்திருக்கும் மாம்பழ ஸ்மூத்தியை ஊற்றி நன்றாக கலக்கவும். இப்போது தேவையான அளவு ஐஸ் சேர்த்து மேலே சிறிதாக வெட்டி வைத்த மாம்பழ துண்டுகளை அழகுக்காக தூவி பரிமாறவும். அவ்வளவு தான். சுவையான மாம்பழ சாகோ தயார். நீங்களும் இந்த கோடைக்கு இதமாய் இந்த இரண்டு ஸ்மூத்தீஸ்களையும் வீட்டில் செய்து பார்த்துவிட்டு எப்படியிருந்தது என்று சொல்லுங்க.