
பார்லி சூப்
தேவையானவை:
பார்லி - 1 கப்
காய்கள் - பீன்ஸ், காரட்
மிளகுத்தூள் - 1/2 டீஸ் பூன்
உப்பு, வெண்ணெய் – தேவைக்கு
செய்முறை:
பார்லியை 1/2 மணி நேரம் வரை நீரில் ஊற வைத்து அந்த நீருடனேயே குக்கரில் வேக வைத்து 5 விசில் வரை வைத்து வெந்ததும் இறக்கி பார்லியை வடிகட்டவும்.
ஒரு கைப்பிடி வேகவைத்த பார்லியை மட்டும் அரைக்கவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து வெண்ணெய் போட்டு உருகியவுடன் வெங்காயம் சிறிது + காய்கறிகள் சேர்த்து வதக்கியதும் பார்லி வேக வைத்த நீர்+உப்பு சேர்த்து வேக விடவும்.
வெந்ததும் பாதி வேக வைத்த பார்லி + அரைத்த பார்லி அனைத்தையும் ஒன்றாக கலந்து மிளகுத்தூள் சேர்த்து குடிக்கவும். சத்தான மழை, குளிருக்கு ஏற்ற சூப் இது.
காய்கறி சூப்
தேவையானவை:
பீன்ஸ் -5
கேரட் - 1
கோஸ் - சிறிது (நறுக்கியது)
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
வெண்ணெய் | சோள மாவு - 1 டீஸ் பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிது
உப்பு – தேவைக்கு
செய்முறை:
கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம்|பூண்டு போட்டு வதங்கியதும், நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும். வெந்தவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகள் வெந்தவுடன் சோள மாவை பாலில் கரைத்து சே ர்த்து ஒரு கொதி வந்ததும் உப்பு, மிளகுத்தூள் வெங்காயத்தாள் சேர்த்து இறக்கி சூடாக குடிக்கவும். ருசியான சத்தான சூப்.
-வசந்தா மாரிமுத்து.