சொஜ்ஜி அப்பமும், சுவையான சேமியா கேசரியும்!

சொஜ்ஜி அப்பமும், சுவையான சேமியா கேசரியும்!
Deepavali 2023
Deepavali 2023

சொஜ்ஜி அப்பம்:

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இந்த சொஜ்ஜி அப்பம் ரொம்ப பேமஸ். நல்ல ருசியாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மைதா ஒரு கப் 

உப்பு ஒரு சிட்டிகை 

நெய் ரெண்டு ஸ்பூன் 

பூரணம் செய்ய: 

ரவா 1/2 கப் 

தேங்காய் துருவல் 2 ஸ்பூன் 

வெல்லம் 3/4 கப் 

ஏலப்பொடி 1/2 ஸ்பூன் 

நெய் 2 ஸ்பூன்

ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, நெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும். மேல் மாவு உலராமல் இருப்பதற்காக தட்டைப் போட்டு மூடுவதற்கு பதில் ஈரத்துணி கொண்டு மூட உலர்ந்து போகாமல் இருக்கும்.

அடி கனமான உருளி அல்லது வாணலியில் 11/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்கும்போது அதில் ரவையை தூவி கட்டி தட்டாமல் கிளறவும். ரவை நன்கு வெந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து கிளறவும். வெல்லத்தில் கல் இருக்குமானால் தனியாக சிறிது நீர் விட்டு கரையும் வரை அடுப்பில் வைத்து பின் வடிகட்டி வெந்த ரவையில் சேர்க்கவும். உருண்டு கெட்டியாகி வரும் சமயம் துருவிய தேங்காய் , ஏலப்பொடி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். ஆறிய பின் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். 

மைதா மாவை கையால் நன்கு பிசைந்து பூரி சைசுக்கு தேய்த்து அதில் ரவா கேசரி உருண்டை ஒன்றை வைத்து மூடி சிறிது கனமாக சப்பாத்திக் கல்லில் தேய்க்கவும். அடுப்பில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்க நன்கு உப்பிக்கொண்டு சூப்பரான சொஜ்ஜி அப்பம் தயார்.

குறிப்பு: மைதாவுக்கு பதில் கோதுமை மாவிலும் செய்யலாம் . 

வெல்லத்திற்கு பதில் சர்க்கரையும் சேர்த்தும் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
சுவையில் No Compromise: காலிஃபிளவர் பனீர் கிரேவி!
சொஜ்ஜி அப்பமும், சுவையான சேமியா கேசரியும்!

சேமியா கேசரி:

சேமியா ஒரு கப்

சர்க்கரை முக்கால் கப் 

தண்ணீர் இரண்டு கப் 

ஏலப்பொடி அரை ஸ்பூன் 

முந்திரி பருப்பு ,திராட்சை தலா 10

நெய் 1/4 கப்

வாணலியில் நெய் விட்டு முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்த்து வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் சேமியாவை பொடித்து போட்டு நன்கு வறுத்தெடுத்ததும் இரண்டு கப் தண்ணீர் விட்டு நடுக்கொதி வரும் சமயம் வறுத்த சேமியா சேர்த்து அடுப்பை குறைவான தீயில் வைத்து கிளறவும். சேமியா நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும். நன்கு சுருண்டு வரும் சமயம் ஏலப்பொடி சேர்த்து இறக்கி வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து பரிமாற ருசியான சேமியா கேசரி தயார்.

குணுக்கு:

ர கர முறுமுறு குணுக்கை இட்லி மாவில் செய்யலாம் அடை மாவிலும் செய்யலாம். இப்படி பிரஷ்ஷாக அரைத்தும் செய்யலாம்.

பச்சரிசி ஒரு கப் 

கடலைப்பருப்பு 1/4 கப் 

துவரம் பருப்பு 1/4 கப் 

உளுத்தம் பருப்பு 1/4 கப்

மிளகாய் வற்றல் 6 

உப்பு 

கறிவேப்பிலை சிறிது 

தேங்காய் துண்டுகள் 2 ஸ்பூன் பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்.

 அரிசி பருப்பு வகைகள் அனைத்தையும் ஒன்றாக போட்டு தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊற விடவும். பிறகு களைந்து நீரை வடித்து மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்ததில் கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள், பெருங்காயத்தூள், விருப்பப்பட்டால் பொடியா நறுக்கிய கொத்தமல்லி தழை  சிறிது சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் கிள்ளி போடவும். நன்கு வெந்து இருபுறமும் சிவந்ததும் எடுத்து விட கரகரப்பான குணுக்கு ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com