ஊர் பேசும் பட்சணங்கள்! கொஞ்சம் ஹெல்த்தி! செம்ம்ம டேஸ்ட்டி!

மதுரை பால் பன்
மதுரை பால் பன் www.youtube.com

மதுரை பால் பன் 

என்னென்ன தேவை?

மைதா - 1 ஆழாக்கு, சர்க்கரை - ½ ஆழாக்கு, வெண்ணெய் - 25 கிராம், எண்ணெய் - பொரிக்க.

எப்படி செய்யணும்?

மைதா மாவு, வெண்ணெய், உப்பு எல்லாத்தையும் ஒண்ணா போட்டு. தண்ணி சேத்து பூரி மாவு போல பிசைஞ்சுக்குங்க. என்ன பண்றீங்க? அந்த மாவை சின்ன அளவு போண்டா போல உருட்டி, எண்ணெயில போட்டுப் பொரிச்சு எடுங்க. க்ரிஸ்பியா பொரிக்கக் கூடாது.

இதையும் படியுங்கள்:
உங்கள் வெற்றிக்கு உதவும் ஐவர் யார் தெரியுமா?
மதுரை பால் பன்

பாலுல சர்க்கரைய சேர்த்துக் காய்ச்சுங்க. பால் நல்லா திக்கா, பதமா இருக்கணும். பொரிச்ச உருண்டைங்கள தாம்பாளத்துல போடுங்க. காய்ச்சின பாலை அது மேலே ஊத்துங்க.

விருதுநகர் பட்டர் பன்

என்னென்ன தேவை?

பன் - 4, பால் - 1 ஆழாக்கு, பட்டர் - 50 கிராம், சர்க்கரை - 25 கிராம், ஏலம் தேவைக்கு.

விருதுநகர் பட்டர் பன்
விருதுநகர் பட்டர் பன்

எப்படி செய்யணும்?

ன்ன குறுக்கால கட் பண்ணிக்குங்க. பாதி வெண்ணெயை எடுத்துக்கோங்க. கட் பண்ணுன பன்ல ஒரு பக்கம் வெண்ணெயைத் தடவுங்க. ஒரு பக்கம் சர்க்கரையை தூவி விடுங்க. ரெண்டையும் சேருங்க. ஒரு தவாவுல பாலை ஊத்தி அடுப்புல ஏத்திக்கோங்க. மீதி பாதி வெண்ணெயை அதுல் போட்டு ஏலப்பொடிய தூவி விடுங்க. ஒண்ணா சேர்த்த பன் இருக்கில்ல, அத தவாவில போட்டு ரெண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுத்து வைங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com