ஹெல்தி டிபன் வகைகள்!

ஹெல்தி டிபன் வகைகள்!
Published on

தக்காளி ஊத்தப்பம்

தேவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா 1½ கப், நாட்டுத் தக்காளி- ½  கிலோ, உளுத்தம் பருப்பு - 3 டீஸ்பூன், பச்சை மிளகாய், -3, வர மிளகாய் -10, கொத்தமல்லி -கையளவு, உப்பு, பெருங்காயம் -தேவைக்கு.

செய்முறை: அரிசி, பருப்பு ஊற வைத்து  தக்காளி, பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து  நைசாக அரைக்கவும். கொத்து மல்லியை அரிந்து கலக்கவும். உப்பு, பெருங்காயம் சேர்த்து  தோசையாக நெய் ஊற்றி  வார்த்து எடுக்கவும். கலர்ஃபுல்லாகவும்  டேஸ்டாகவும்  இருப்பதால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

முளைவிட்ட பயறு தோசை

தேவை: புழுங்கல் அரிசி - 3 கப், முளைவிட்ட பச்சைப் பயறு - 200 கிராம், துவரம் பருப்பு - ½ கப், பச்சை மிளகாய் - 4, வர மிளகாய் - 10, புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி -கையளவு, நெய்/எண்ணெய், உப்பு -தேவைக்கு

செய்முறை: மேற்கண்டவற்றை   தண்ணீரில் ஊற வைத்து கொரகொரப்பாக அரைக்கவும். தேவையான அளவு உப்பு, பெருங்காயம் சேர்த்து நெய்/எண்ணெய் ஊற்றி தோசையாக வார்த்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். முளைவிட்ட பச்சைப் பயறு ஆரோக்கியத்திற்கு நல்லது. குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம்.

ரவை டிலைட்

தேவை: பாம்பே ரவை, தயிர் (கெட்டி) -தலா1 கப், மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, மஞ்சள் பொடி-ஒரு சிட்டிகை, எண்ணெய்-4 டீஸ்பூன், கடுகு-1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு -½டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை -சிறிது.

செய்முறை: தயிருடன்  ரவை, உப்பு, மஞ்சள் பொடி,  மிளகாய்ப்பொடி, பெருங்காயம் சேர்த்துப் பிசைந்து 5 நிமிடம் ஊற வைக்கவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும். பிறகு ரவை கலவையை போட்டுக் கிளறி இரண்டு நிமிடம்  மூடி வைக்கவும். பிறகு திறந்து, உதிராக வரும் வரை கிளரவும்.

சைட் டிஷ் சாம்பார் அல்லது சட்னி!

வெஜிடபிள் ஊத்தப்பம்

தேவை: பச்சரிசி, புழுங்கலரிசி - தலா 1½கப்,  உளுத்தம்பருப்பு -1கப்,  புதினா -1கட்டு

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி,  உளுத்தம் பருப்பை ஊற வைத்து  அரைக்கவும். உப்பு சேர்த்து 4 மணி நேரம்  புளிக்க வைக்கவும்.  புதினாவை ஈரம் இல்லாமல் உலர்த்தி  மிக்ஸியில் பொடிக்கவும். தோசைக் கல்லில் தோசை ஊற்றி, மேலே புதினா பவுடரை தூவி, நெய்/ எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.  தேங்காய் சட்னி அல்லது  தக்காளி சட்னி சூப்பர்  மேட்ச்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com