healthy recipes
healthy recipesImage credit - youtube.com

ஆரோக்கியமான அக்ரூட் பர்பியும், கோதுமை பொட்டுக்கடலை அல்வாவும்!

Published on

தேவையான பொருட்கள்:

அக்ரூட் -ஒரு கப்

பால்- ஒன்னரை கப்

கோவா -ஒரு டேபிள் ஸ்பூன்

சர்க்கரை- ஒரு கப்

நெய்- அரை கப்

செய்முறை:

அக்ரூட் பருப்பை நன்றாக ஊறவைத்து நைசாக அரைக்கவும். அதனுடன் பால், கோவா, சர்க்கரை, நெய் சேர்த்து கைவிடாமல் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி டபராவால் நன்கு பரப்பி விட்டு அழகாக்கி துண்டுகள் போட்டால் அக்ரூட் பர்ஃபி ரெடி.

கோதுமை, பொட்டுக்கடலை அல்வா! 

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு -ஒரு கப்

நெய் - ஒன்னேகால் கப் 

சீனி- ஒன்னே கால் கப்

பொட்டுக்கடலைப் பொடி- கால் கப்

ஏலப்பொடி- 3 சிட்டிகை

நட்ஸ் ஃப்ளேக்ஸ்-1டேபிள் ஸ்பூன்

தண்ணீர் -இரண்டரை கப்

இதையும் படியுங்கள்:
பல நோய்களை தீர்க்கும் அற்புத மருந்து இந்த குருத்து!
healthy recipes

செய்முறை:

தண்ணீரில் சீனியை கொட்டி கொதிக்க விடவும். அடி கனமான வாணலியில் நெய்யை ஊற்றி கோதுமை மாவை வாசம் வரும் வரை நன்கு வறுத்து பிறகு பொட்டுக்கடலை மாவையும் சேர்த்து வறுத்துக்கொண்டே கொதிக்கும் சீனி தண்ணீரை மாவில் சேர்த்து நன்றாக கட்டித் தட்டாமல் கிளறவும் . பின்னர் ஏலப்பொடி, நட்ஸ் ஃப்ளேக்ஸை கலந்து நன்றாகக்கிளறி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். கோதுமை பொட்டுக்கடலை அல்வா ரெடி. 

குறிப்பு: அளவு சரியாக இருந்தால் கட்டி தட்டாமல் எடுத்து விடலாம். நெய் குறைவாக சேர்த்தால் சில நேரங்களில் கட்டியாகும். அப்பொழுது குழி கரண்டியால் மாவை தட்டிக் கொண்டே இருந்தால் கட்டிகள் உடைந்து மென்மையாகும். ஆதலால் நெய் அதிகமாக ஊற்றி மாவினை சிவக்க வறுக்கவும்.

logo
Kalki Online
kalkionline.com