இதோ குட்டீஸ்களுக்கு ஏற்ற சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ்!

Evening snacks
Evening snacks

ள்ளிக்கூடம் திறந்தாச்சு. இனி ஸ்கூல் விட்டு வரும் குழந்தைகள் அம்மா இன்னைக்கு என்ன ஸ்நாக்ஸ் என்று கேட்டுக் கொண்டுதான் ஓடி வருவார்கள். பசியோடு இருக்கும் குழந்தைகளுக்கு திரும்பவும் தோசை, இட்லி என்று கொடுப்பதற்கு பதிலாக அவர்கள் விரும்பும் ஸ்நாக்ஸ் செய்து தரலாம். குட்டீஸ்களுக்கான சுவையான ஸ்நாக்ஸ் சில.

பிரெட் சில்லி:

பிரெட் 4 

வெங்காயம் 2 

குடைமிளகாய் 1

தக்காளி 2 

உப்பு தேவையானது

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

கரம் மசாலா 1/2 ஸ்பூன்

மிளகாய்த்தூள் 1/4 ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி சிறிது 

கடுகு, சீரகம் தாளிக்க 

எண்ணெய் பொரிக்க

வாணலியில் எண்ணெய் விட்டு பிரட்களை 4 துண்டுகளாக்கி பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.

வாணலியில் கடுகு, சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும். பின் அதில் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து கிளறவும். கடைசியாக பொரித்து வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளை தூவி இறக்க மிகவும் ருசியான குழந்தைகள் விரும்பும் பிரெட் சில்லி ரெடி.

பொட்டட்டோ ஸ்மைலி:

உருளைக்கிழங்கு அரை கிலோ 

உப்பு தேவையானது 

மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்

சீரகத்தூள் 1 ஸ்பூன்

மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்

கார்ன்ஃப்ளவர் மாவு 4 ஸ்பூன் 

பிரட் கிரம்ஸ்  1/4 கப்

எண்ணெய் பொரிக்க

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். அத்துடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், கான்ஃபிளவர், பிரெட் கிரம்ஸ் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து ஃப்ரிட்ஜில் ஒரு 20 நிமிடங்கள் வைத்தெடுக்கவும். பிறகு அவற்றை சிறிது தடிமனான சப்பாத்திகளாக செய்து ஒரு சிறு டப்பாவின் மூடியைக் கொண்டு வட்ட வடிவில் அழுத்தி எடுக்கவும்.

ஒவ்வொன்றிலும் ஸ்மைலி செய்து எண்ணெயில் பொரித்தெடுக்க குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பன்னீர் கட்லெட்:

உருளைக்கிழங்கு 4

பன்னீர் ஒரு கப் 

வெங்காயம் 1 

உப்பு தேவையானது

மிளகாய் தூள் 1 ஸ்பூன் 

தனியா தூள் 1/2 ஸ்பூன் 

கொத்தமல்லி சிறிது 

எலுமிச்சம்பழம் 1 மூடி

கார்ன்ஃபிளவர் மாவு 1/2 கப் 

பிரட் கிரம்ஸ் 1/2 கப் 

எண்ணெய் பொரிக்க

இதையும் படியுங்கள்:
மன ஆரோக்கியத்தைக் காக்கும் சில வழிமுறைகள்!
Evening snacks

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய பன்னீர், கொத்தமல்லி, கார்ன்ஃபிளவர் மாவு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து விடவும். கடைசியாக எலுமிச்சம்பழச் சாறு சிறிது சேர்த்து விருப்பமான வடிவத்தில் கட்லட் செய்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃபிளவர் மாவுடன் சிறிது உப்பு கலந்து கரைத்து வைத்துக் கொண்டு அதில் கட்லெட்டை முக்கி எடுத்து பிரெட் கிரம்ஸில் பிரட்டி ரெடியாக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் போட்டு பொரித்து எடுக்க சுவையான கட்லெட் தயார். தக்காளி சாஸ் உடன் பரிமாற குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com