ஹோலி பண்டிகை ஸ்பெஷல் ’ஜில் தண்டாய்’ வீட்டிலேயே ட்ரை பண்ணலாம் வாங்க!

தண்டாய்...
தண்டாய்...

ட இந்தியாவில் தண்டாய் மிகவும் பிரபலமான பானமாகும். இது சிவராத்திரி அன்று  செய்யப்படும். சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பானம் என்று கூறப்படுகிறது. தண்டாய் என்றால் ‘குளிர்ச்சி’ என்று பொருள். இது ஹோலி பண்டிகையின்போது செய்யப்படும் பானமாகும்.

தேவையான பொருட்கள்:

பாதாம்-100கிராம்.

முந்திரி-50 கிராம்.

சோம்பு-1/4 தேக்கரண்டி.

பிஸ்தா -50 கிராம்.

மெலன் விதைகள்-1/4கப்.

மிளகு-1 தேக்கரண்டி.

குங்குமப்பூ- சிறிதளவு.

ஏலக்காய்-8

சக்கரை- 1/2கப்.

பால்- தேவையான அளவு.

கசகசா-2 தேக்கரண்டி.

ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு.

ரோஜா இதழ்கள் – 1 தேக்கரண்டி.

செய்முறை விளக்கம்:

முதலில்  ஒரு  ஃபேனில் பாதாம் 100 கிராம், முந்திரி 50 கிராம், பிஸ்தா 50 கிராம், கசகசா 2 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, ஏலக்காய் 8, மெலன் விதைகள் 1/4கப், சோம்பு ¼ தேக்கரண்டி சேர்த்து நன்றாக 5 நிமிடம் வறுத்து கொள்ளவும்.

பிறகு வறுத்த கலவையை மிக்ஸியில் போட்டு அத்துடன் ரோஜா இதழ் 1 தேக்கரண்டி,குங்குமப்பூ சிறிதளவு, சக்கரை 1/2கப் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இப்போது அரைத்த மாவை ஒரு சல்லடையில் இட்டு நன்றாக சலித்து எடுத்து கொள்ளவும். அனைத்தையும் ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ளவும். இப்போது இன்ஸ்டன்ட் தண்டாய் பவுடர் தயார்.

இப்போது ஒரு தம்ளரில் ஒரு தேக்கரண்டி செய்து வைத்திருக்கும் தண்டாய் பவுடரை போட்டு பிரிட்ஜில் வைத்து எடுத்த குளிர்ந்த பாலை அத்துடன் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது மேலே அழகுக்காக உலர்ந்த ரோஜா இதழ், பொடியாக நறுக்கிய பிஸ்தா, ஐஸ்கட்டிகளை சேர்த்து பரிமாறவும். இப்போது சுவையான தண்டாய் தயார். இந்த பானத்தில் முந்திரி, பிஸ்தா,மிளகு, பால் போன்ற பொருட்கள் பயன் படுத்துவதால் உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமாகும். நீங்களும் வீட்டிலேயே ஒருமுறை தண்டாய் பானத்தை செய்து பார்த்துவிட்டு எப்படியிருந்தது என்று சொல்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com