வீட்டிலேயே செய்யலாம் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக்!

Homemade Strawberry Milkshake.
Homemade Strawberry Milkshake.

ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் அனைவரும் விரும்பி குடிக்கும் ஆரோக்கியமான புத்துணர்ச்சி கொடுக்கும் பானமாகும். காலை உணவாக இதை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். ஸ்ட்ராபெரி பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், இந்த மில்க் ஷேக் அனைவருக்கும் சிறந்ததாகும். ஸ்ட்ராபெரி சிரப் சேர்க்காமல், ஸ்ட்ராபெரி பழங்களைப் பயன்படுத்தி இந்த அற்புத பானத்தை செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

ஸ்ட்ராபெரி - 1 கப்

சர்க்கரை - 5 ஸ்பூன் 

பால் - 1 கப்

செய்முறை

ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் செய்வது நீங்கள் நினைப்பது போல கடினமெல்லாம் கிடையாது. உங்களிடம் மிக்ஸி இருந்தால் போதும், உங்களுக்கு தேவையான எல்லா விதமான ஜூஸையும் வீட்டிலேயே ஆரோக்கியமாக தயாரித்து பருகலாம். 

முதலில் ஸ்ட்ராபெரி மற்றும் சர்க்கரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். பின்னர் அது பேஸ்ட் போல மாறியதும் குளிர்ந்த பாலை அதில் ஊற்றி கலந்தால், நீங்கள் எதிர்பார்க்கும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் தயார். 

இதையும் படியுங்கள்:
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிக்க ஈஸி எனர்ஜி ட்ரிங்க்! நட்ஸ் மில்க் ஷேக்!
Homemade Strawberry Milkshake.

சிலர் மில்க் ஷேக் செய்யும்போது பாலை மிக்ஸி ஜாரிலேயே ஊற்றி கலப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் அப்படி செய்யும்போது நீங்கள் பயன்படுத்துவது நாட்டு மாட்டுப் பாலாக இருந்தால், அதிலிருந்து வெண்ணை வெளியேற ஆரம்பித்து விடும். அது மிக்ஸி ஜாரில் படிவது மட்டுமின்றி, மில்க் ஷேக் மேலே வெண்ணை போல மஞ்சள் நிறத்தில் மிதக்கும். இதைத் தவிர்க்க முதலில் பழத்தை அரைத்து விட்டு அதில் பாலை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். 

உங்கள் வீட்டு பிரிட்ஜில் ஐஸ்கிரீம் இருந்தால், இந்த மில்க் ஷேக் மேல் வைத்து சாப்பிட சுவை அட்டகாசமாக இருக்கும். கட்டாயம் அனைவரும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக்கை முயற்சித்துப் பாருங்கள். 

 பலர் இதை வெளியே வாங்கிக் குடிக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். ஆனால் வெளியே தயாரிக்கும் உணவுகள் அந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்குமா என்பது நமக்கு தெரியாது. எனவே முடிந்தவரை வீட்டிலேயே உணவுகளை செய்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com