கடையில் வாங்க வேண்டாம்: வீட்டிலேயே கோதுமை மாவு சப்பாத்தி க்யூப்ஸ் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம்!

chapati-cubes-snacks-recipe
chapati-cubes-snacks-recipe
Updated on

கோதுமை மாவு உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. கோதுமை மாவில் அதிகபட்சம் சப்பாத்தி போன்றவாறு தான் நாம் சமைத்து சாப்பிட்டு வந்துள்ளோம். இன்று அதற்கு மாற்றாக ஸ்நாக்ஸ் ரெசிபி செய்யலாம். கோதுமை மாவில் உடலுக்கு நன்மையை தரும் பல நார்ச்சத்து, வைட்டமின்கள், செலினியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து ரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்த உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது.

மேலும் கோதுமை மாவு உடல் எடையை குறைக்க அதிகம் பயன்படுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது. கோதுமையில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையை குறைக்க உதவுகிறது. இது மாதிரி பல நன்மைகளைக் கொண்ட கோதுமை மாவில் ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

கோதுமை மாவு    -       300 கிராம் 

சிறுஞ்சீரகம்              -    2 டீஸ்பூன்

உப்பு                        -    தேவையான அளவு 

கடலை மாவு          -   தேவையான அளவு 

எண்ணெய்            -   தேவையான அளவு 

வத்தல் தூள்         -     தேவையான அளவு

செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து அதனுடன் சிறுஞ்சீரகம், கடலைமாவு, வத்தல் தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி சப்பாத்தி பக்குவத்தில் நன்கு பிசைந்து கொள்ளவேண்டும். பிசைந்த மாவின் மேல் சிறிதளவு வர கோதுமை மாவை சேர்த்து 10 நிமிடங்கள் அப்படியே விடவும். பிசைந்த மாவை நன்கு அழுத்தி கொடுக்கவேண்டும்.

சப்பாத்திக்கு திரட்டுவதுபோல உருண்டை பிடித்து சப்பாத்தி கட்டையில் தேய்த்து தோசை தவாவில் இரண்டு பக்கமும் ஒரு நிமிடம் போட்டு எடுக்கவேண்டும். பின் இதனை க்யூப் சேப்பில் கட் செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடாகியவுடன் நாம் கட் செய்து வைத்த சப்பாத்தி க்யூப்கலை எண்ணெய்யில் சேர்த்து நன்கு இரண்டு புறமும் சிவந்து வரும்படி பொரித்து எடுக்க வேண்டும். அடுப்பை மீடியாமான வெப்பத்தில் வைத்து பொரித்தெடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே செய்யலாம் 'பாசிப்பருப்பு உருண்டை': இளமையைத் தக்கவைக்கும் அற்புத உணவு!
chapati-cubes-snacks-recipe

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி தயார். நாம் கடைகளில் ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிடுவதை காட்டிலும் வீட்டிலேயே செய்வது ஆரோக்கியமான தாகவும் இருக்கும். இறுக்கமான கண்ணாடி பாத்திரத்தில்  போட்டு மூடிவைத்து இதை நாம் ஒரு வாரத்திற்கு ஸ்டோர் செய்து வைத்தும் சாப்பிடலாம். இது ஒரு புதுவிதமான ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ஆகும்.

logo
Kalki Online
kalkionline.com