சத்து மிகுந்த கொள்ளு லட்டு செய்வது எப்படி

சத்து மிகுந்த கொள்ளு லட்டு செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

கொள்ளு - ஒரு கிண்ணம்

நாட்டு சர்க்கரை - முக்கால் கிண்ணம்

நெய் - சிறிதளவு.

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு 

தேங்காய் துருவல் - கால் கிண்ணம்.

செய்முறை :

வாணலியில் நெய் விட்டு கொள்ளுவை போட்டு இளம்பதமாக வறுத்து எடுத்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். பிறகு நீரை நன்கு வடித்து, நாட்டு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.

இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக பிடித்தால் சுவையான கொள்ளு லட்டு தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com