சளியை கரைக்கும் கொள்ளு சூப் செய்வது எப்படி?

சளியை கரைக்கும் கொள்ளு சூப் செய்வது எப்படி?
Published on

அசைவ உணவுகளின் மூலம் கிடைக்கும் உயர்தர புரதத்தை அதிகமாக கொடுக்கக்கூடிய ஒரே தானியம் கொள்ளு. கொழுப்பைக் கரைப்பதிலும் கொள்ளுதான் முதலிடம். அதுமட்டுமல்லாமல், குளிர்காலத்தில் தொல்லை தரும் சளியை கரைக்க மிகவும் உதவுவது கொள்ளு சூப். இந்த கொள்ளு சூப் எப்படி வைக்கலாம் என்று பார்ப்போம்.

தேவையானவை:

கொள்ளு - 2 டீஸ்பூன்

மிளகு, சீரகம், பெருங்காயப்பொடி - தலா அரை ஸ்பூன்

பூண்டு - 2 பல்

தக்காளி - 1

கொத்தமல்லி, கருவேப்பிலை சிறிது

மஞ்சள் பொடி, - சிறிது நல்லெண்ணெய் - ஒரு ஸ்பூன் உப்பு - தேவைக்கு

செய்முறை:

கொள்ளு, மிளகு, சீரகம், பூண்டு, தக்காளியை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து இரண்டு டம்ளர் நீரில் கரைத்து, மஞ்சள் தூள் பெருங்காயப்பொடி நல்லெண்ணெய், உப்பு கலந்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் இறக்கி வைக்கவும். சுவையான கொள்ளு சூப் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com