

பாவ் பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 4
காலிஃபிளவர் – 1 கப்
பச்சை பட்டாணி – ½ கப்
கேரட் – 1
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
இஞ்சி–பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பாவ் பஜ்ஜி மசாலா – 2 டீஸ்பூன்
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
வெண்ணெய் – 2–3 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
பன் – தேவையான அளவு
வெண்ணெய் – சிறிதளவு
செய்முறை:
கடாயில் வெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி–பூண்டு விழுது சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து மசியும் வரை சமைக்கவும். இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், பாவ் பஜ்ஜி மசாலா, உப்பு சேர்த்து கிளறவும். காய்கறிகளை வேகவைத்து மசித்து இத்துடன் சேர்த்து நன்றாக கலக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 5 முதல் 10 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும். கடைசியில் வெண்ணெய், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.
பின்னர் பன்னை நடுவில் வெட்டி கொள்ளவும். தவாவில் வெண்ணெய் தடவி பன் துண்டுகளை இருபுறமும் பொன்னிறமாக வறுக்கவும். சூடான பஜ்ஜியை தட்டில் வைத்து மேல் சிறிது வெண்ணெய் சேர்த்து வறுத்த பன் துண்டுகளை, நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை துண்டுடன் பரிமாறவும்.
ஹோட்டல் ஸ்டைல் ரகசியங்கள்:
1. காய்கறி தேர்வுதான் முதல் ரகசியம்: ஹோட்டல்களில் எல்லா காய்கறிகளையும் தனித்தனியாக வேகவைத்து, அவற்றை மிக நன்றாக மசிய செய்கிறார்கள். உருளைக்கிழங்கு – 50%, காலிஃபிளவர் – 25%, பட்டாணி – 15%, கேரட் – 10%. காய்கறி கட்டிகள் இல்லாமல் Smooth mash தான் ஹோட்டல் லுக்!
2. வெண்ணெய்தான் ஹீரோ: எண்ணெய் தவிர்த்து Pure butter (Amul type) மட்டுமே பயன்படுத்துவார்கள் 3–4 டேபிள்ஸ்பூன் (சமைக்கும்போது + மேலே போட). இதுதான் அந்த “Rich smell & shine”.
3. தக்காளி சமைக்கும் முறை: தக்காளி பச்சை வாசனை போகும்வரை முற்றிலும் மசியும் வரை வதக்க வேண்டும். சிறிது வெண்ணெய் + உப்பு சேர்த்து வதக்கினால் தக்காளி சீக்கிரம் மசியும்.
4. மசாலா போடும் நேரம்தான் மாயாஜாலம்: மசாலா தூள்களை தக்காளி மசியும் போதே சேர்ப்பார்கள் அளவு: பாவ் பஜ்ஜி மசாலா – 2½ டீஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் – ஒரு சிட்டிகை. மசாலா வெண்ணெயில் “roast” ஆகும் போது தான் aroma வரும்.
5. தட்டு & கரண்டி – ஹோட்டல் ஸ்டைல் மாஷிங்: கரண்டியால் கலக்க மாட்டார்கள். Flat ladle (தட்டு கரண்டி) கொண்டு தட்டி மசிய பரப்பி திருப்பிவிடுவதுதான் அந்த “Street-style texture.”
6. பஜ்ஜி எப்போதும் கொதிக்கவேண்டும்: ஹோட்டலில் பஜ்ஜி சிம்மரில் தொடர்ந்து கொதித்துக்கொண்டே இருக்கும். காரணம் சுவை ஆழமாகும். மசாலா முழுதும் ஊறி டார்க் நிறம் ஆகும்.
7.எலுமிச்சை & கொத்தமல்லி Gas off செய்த பிறகு சேர்ப்பதால் Fresh taste & smell கிடைக்கும்.
ஹோட்டல் ஸ்டைல் பன் ரகசியம்: தவாவில் வெண்ணெய் சிறிது பாவ் பஜ்ஜி மசாலா, நறுக்கிய கொத்தமல்லி போட்டு பன்னை அதில் தடவி வறுக்கவும் சாதாரண பாவ் கூட “5-star” ஆகும்.