
இன்றைக்கு சுவையான கருவேப்பிலை குழம்பு மற்றும் கீரை தொக்கு ரெசிபிஸை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
கருவேப்பிலை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்.
பொடி அரைக்க,
எண்ணெய்-தேவையான அளவு.
கருவேப்பிலை-2 கைப்பிடி.
பூண்டு-2
மிளகு-1/2 தேக்கரண்டி.
குழம்பு தாளிக்க,
கடுகு-1 தேக்கரண்டி.
வெந்தயம்-1/4 தேக்கரண்டி.
சின்ன வெங்காயம்-20
தக்காளி-1
பூண்டு-10
கருவேப்பிலை-சிறிதளவு.
உப்பு-தேவையான அளவு.
சாம்பார் பொடி-2 தேக்கரண்டி.
புளி-நெல்லிக்காய் அளவு.
வெல்லம்-1 சிட்டிகை.
கருவேப்பிலை குழம்பு செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து 2 கைப்பிடி அளவு கருவேப்பிலை, 2 பூண்டு, ½ தேக்கரண்டி மிளகு சேர்த்து நன்றாக மொறு மொறுவென வறுத்துக் கொள்ளவும். இதை மிக்ஸியில் சேர்த்து நன்றாக பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் எண்ணெய் சிறிதளவு சேர்த்துவிட்டு கடுகு 1 தேக்கரண்டி, ¼ தேக்கரண்டி வெந்தயம், சின்ன வெங்காயம் 20, பூண்டு 10, கருவேப்பிலை வதக்கவும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி 1, உப்பு தேவையான அளவு, சாம்பார் பொடி 2 தேக்கரண்டி, அரைத்த கருவேப்பிலை பொடியை சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து அதையும் சேர்த்து மூடி வைத்துவிடவும். கடைசியாக, எண்ணெய் பிரிந்து வந்ததும் வெல்லம் 1 சிட்டிகை சேர்த்துக் கொள்ளவும். அவ்வளவுதான் கருவேப்பிலை குழம்பு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டில் ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
கீரை தொக்கு செய்ய தேவையான பொருட்கள்.
வெங்காயம்-1
பூண்டு-5
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
எண்ணெய்-தேவையான அளவு.
கடுகு-1/2 தேக்கரண்டி.
சீரகம்-1/2 தேக்கரண்டி.
வரமிளகாய்-2
அரைக்கீரை-1 கட்டு.
உப்பு-தேவையான அளவு.
புளி-நெல்லிக்காய் அளவு.
கீரை தொக்கு செய்முறை விளக்கம்.
முதலில் மிக்ஸியில் சிறிதாக நறுக்கிய வெங்காயம் 1, பூண்டு 5, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் எண்ணெய் சிறிதளவு சேர்த்துவிட்டு கடுகு ½ தேக்கரண்டி, சீரகம் ½ தேக்கரண்டி, வரமிளகாய் 2, அரைத்த பேஸ்ட்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் தேவையான அளவு உப்பு சேர்த்துவிட்டு அரைக்கீரை 1 கட்டை நன்றாக கழுவி வைத்ததை சேர்த்துக்கொள்ளவும். இத்துடன் புளி நெல்லிக்காய் அளவு சேர்த்து கரைத்து வைத்த தண்ணீரை கலந்துவிட்டு மூடி வைக்கவும். எண்ணெய் நன்றாக பிரிந்து வந்ததும் இறக்கிவிடலாம். இதை சூடான சாதத்துடன் போட்டு சாப்பிட்டால் அல்டிமேட் சுவையாக இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.