எந்த உணவு செரிக்க எவ்வளவு நேரம் ஆகும்? இதை தெரிஞ்சுக்கோங்க!

எந்த உணவு செரிக்க எவ்வளவு நேரம் ஆகும்? இதை தெரிஞ்சுக்கோங்க!

நாம் உண்ணும் உணவுகள் எளிமையாக ஜீரணிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதனால் எளிமையான ஜீரணசக்தி கொண்ட ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துவார்கள். அதற்கு எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் ஜீரணமாகும் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு வகையான உணவிலும் அதிலுள்ள உட்பொருள்கள் மற்றும் அவற்றின் தன்மையைப் பொருத்து ஜீரணமடைவதற்கு நேரங்கள் பிடிக்கும். அதில் பெரும்பாலும் பரவலாக நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகளின் செரிமான நேரத்தை இங்கே பார்ப்போம்.

​அரிசி

அரிசி உணவுகள் சாப்பிட்டு இரண்டு மணி நேரத்தில் ஜீரணமாகுமாம்.

காய்கறி, பழங்கள்

பிரஷ்ஷான பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட்டு 15 - 20 நிமிடத்தில் ஜீரணித்து விடும்.

மீன்

45 - 60 நிமிடங்களில் ஜீரணித்து விடுமாம்.

பால் பொருள்கள்

பால் பொருள்கள் முழுமையாக ஜீரணிக்க 2 மணி நேரம் பிடிக்குமாம்

வேகவைத்த காய்கறிகள்

சமைக்கப்பட்ட காய்கறிகள் செரிமானம் அடைவதற்கு 40 நிமிடங்கள் தேவைப்படும்.

சிக்கன்

ஒன்று முதல் ஒன்றரை மணி நேரத்தில் ஜீரணமடையும்.

​உருளைக்கிழங்கு போன்ற கிழங்குகள்

கிழங்கு வகைகள் ஜீரணமாக ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்ளும்

நட்ஸ்

பாதாம், முந்திரி உள்ளிட்ட நட்ஸ் வகைகள் 3 மணி நேரத்தில் ஜீரணிக்கும்.

ஆட்டிறைச்சி

Editor 1

ஆட்டிறைச்சி ஜீரணிக்க 4 மணி நேரம் எடுத்துக் கொள்ளுமாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com