பால்பூரி
பால்பூரிwww.youtube.com

சுண்டியிழுக்கும் சுவையில் பால்பூரி எப்படி செய்யலாம்... பார்க்கலாம் வாங்க?

Published on

தென்னிந்தியாவில் செய்யப்படும் பாரம்பரியமான இனிப்புகளில் ஒன்றுதான் பால் பூரியாகும். இதை ‘பால் போளி’ என்றும் அழைப்பார்கள். சரியாக சொல்ல வேண்டுமானால் பால் பூரி கர்நாடகாவில் உருவான இனிப்பு வகையாகும். எனினும் தமிழ்நாட்டிலும் இது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பண்டிகை காலங்களில் பரவலாக செய்யப்படும் இனிப்பு வகை என்பது குறிப்பிடத்தக்கது.

பால் பூரி செய்ய தேவையான பொருட்கள்:

ரவை-1 கப்.

நெய்-1 தேக்கரண்டி.

உப்பு-1 சிட்டிகை.

பால்-1 லிட்டர்.

துருவிய தேங்காய்-2 தேக்கரண்டி.

பால்-1/4கப்.

ஊற வைத்த பாதாம்-10

ஊற வைத்த முந்திரி-10

சக்கரை-1/2 கப்.

குங்குமப்பூ- சிறிதளவு.

ஏலக்காய் தூள்-1/4 தேக்கரண்டி.

பொடியாக வெட்டி பாதாம்- சிறிதளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

பால்பூரி செய்முறை விளக்கம்:

முதலில் 1கப் ரவையை மிக்ஸியில் பவுடராக அரைத்து கொள்ளவும். இப்போது அதை பவுலில் மாற்றி கொண்டு 1 தேக்கரண்டி நெய், 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இப்போது ஈரமான துணி போட்டு மாவை அரைமணி நேரம் ஊர வைக்கவும்.

ஒரு ஃபேனில் 1 லிட்டர் பாலை சேர்க்கவும். பாலை 10 நிமிடம் நன்றாக சுண்ட விடவும். அதற்குள் மிக்ஸியில்  2 தேக்கரண்டி துருவிய தேங்காய், ¼ கப் பால் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு அத்துடன் ஊர வைத்து எடுத்த 10 பாதாமையும், 10 முந்திரியையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
பயண அனுபவம் - வாருங்கள் நயாகரா செல்வோம்!
பால்பூரி

இப்போது அடுப்பிலிருக்கும் சுண்ட காய்ச்சிய பாலில் அரைத்து வைத்த பேஸ்ட்டை சேர்க்கவும். இத்துடன் ½ கப் சக்கரை சேர்க்கவும். குங்குமப்பூ சிறிதளவு நிறத்திற்காக, ஏலக்காய் தூள் சிறிதளவு சேர்க்கவும். பால் தயாராகி விட்டது.

இப்போது பூரி செய்யலாம். மாவை சிறிது சிறிதாக உருட்டி குட்டி குட்டி பூரி செய்து வைத்து கொள்ளவும். அடுப்பில் எண்ணெய் சூடானதும் அதில் பூரியை போட்டு நன்றாக பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு தட்டில் பூரியை அடுக்கி வைத்து விட்டு செய்து வைத்திருந்த பாலை அதன் மீது சிறிது சிறிதாக ஊற்றவும். மேலே அழகுக்காக குங்குமப்பூ மற்றும் பிஸ்தா சேர்த்து பரிமாறவும். சூடான சுவையான பால்பூரி தயார். இதை 15 நிமிடம் பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com