
1. முட்டை கோஸ் பான்கேக்
தேவையானவை
முட்டைகோஸ் பொடியாய் அரிந்தது - 2கப்
காரட் துருவியது - 1
பெரிய வெங்காயம மெலிதாக நீளவாக்கில் அரிந்தது- 1
ஸ்ப்ரிங் ஆனியன் -2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு- ஒரு கப்
கடலை மாவு- 1 கப்
மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
மிளகுப் பௌடர் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிந்த முட்டைகோசை எடுத்துக் கொள்ளவும். அதில் துருவிய காரட், ஸ்ப்ரிங் ஆனியன், அரிந்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகுப் பொடி மற்றும் உப்பு சேர்க்கவும். இதில் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை சேர்த்து பரத்தி விடவும். இருபுறமும் வேகவைத்து தக்காளிச் சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
2. பயத்தம்பருப்பு கச்சோரி
தேவையானவை
மைதா மாவு - 1கப்
ரவை - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
பயத்தம் பருப்பு - அரை கப்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 1
சீரகப் பொடி - 1டீஸ்பூன்
ஓமம் - அரை டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
மாங்காய் பௌடர் - கால் டீஸ்பூன்
சாட் மசாலா - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை
பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். மைதாவில் சூடான நெய், ரவை மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும். இதை ஒரு ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும். ஊற வைத்த பயத்தம் பருப்பை இஞ்சி, உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து அரைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் சீரகம் மற்றும் ஓமம் சேர்த்து அரைத்த பயத்தம்பருப்பு விழுதை சேர்த்து அதில் மிளகாய் பொடி , சீரகப் பொடி, மாங்காய் பொடி, சாட் மசாலா எல்லாம் சேர்த்து நன்கு கிளறவும். அதில் கொத்தமல்லித்தழை சேர்க்கவும். இந்த விழுது நன்கு ஆறிய பிறகு ஒரு எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து பிசைந்து வைத்திருக்கும் மைதாவில் வைத்து சிறிய வட்ட வடிவமாக செய்து எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும். மிதமான சூட்டில் பொரிக்கவும். கொத்தமல்லி சட்னி அல்லது புதினா சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.