குறைந்த நேரத்தில் சுவையான கார்ன்ஃபிளேக்ஸ் சிவ்டா செய்வது எப்படி?

Healthy snacks
cornflakes Chivda Mixture
Published on

கார்ன்ஃபிளேக்ஸ் சிவ்டா மிக்ஸ்சர் (cornflakes Chivda Mixture) ரெசிபி:

தேவையான பொருட்கள்:

1.ரெடிமேட் பிளைன் கார்ன்ஃபிளேக்ஸ் செரியல் 1 கப்

2.ஃபிரஷ் முருங்கை இலைகள் ¼ கப்

3.வேர்கடலைப் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்

3.முந்திரிப்பருப்பு 2 டேபிள் ஸ்பூன்

4.பாதாம் பருப்பு ¼ கப்

5.உலர் திராட்சை ½ டேபிள் ஸ்பூன்

6.மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்

7.சிவப்பு மிளகாய் தூள் ½ டேபிள் ஸ்பூன்

8.சாட் மசாலா ¼ டீஸ்பூன்

9.சர்க்கரை ½ டேபிள் ஸ்பூன்

10.தேவையான அளவு உப்பு

11.நெய் 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் எரியவிட்டு முருங்கை இலைகளைப் போடவும். இலைகள் நீர்ச் சத்தின்றி கிரிஸ்பியாக ஆனதும் கடாயிலிருந்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். அதே கடாயில் மீதமுள்ள நெய்யை ஊற்றி, வேர்கடலைப் பருப்பு மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து கோல்டன் கலர் வரும்வரை வறுத்து எடுக்கவும்.

பின் கடாயில் முந்திரிப்பருப்பு, உலர் திராட்சைகளைப் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்தெடுக்கவும். பிறகு தீயை மிகக் குறைவாக வைத்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா தூள், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கடாயில் போட்டு, விரைவாக, பொடிகள் கருகிவிடாமல் சில நொடிகள் கிளறவும். அதனுடன் கார்ன்ஃபிளேக்ஸ்ஸை போட்டு, மசாலா தூள் அதில் நன்கு ஒட்டுமாறு கடாயை குலுக்க (toss) வும். சிறு தீயில் கார்ன்ஃபிளேக்ஸ் கிரிஸ்பியாவதற்கு சுமார் ஒரு நிமிடம் வைத்து, பின் அடுப்பிலிருந்து இறக்கவும். அதனுடன் வறுத்த பாதாம், முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, மேற்பரப்பில் வேர்கடலைப் பருப்பு, முருங்கை இலைகள் தூவி அலங்கரிக்கவும்.

ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த கார்ன்ஃபிளேக்ஸ் சிவ்டா மிக்ஸ்சர் ஸ்னாக்ஸாக உட்கொள்ள தயார்.

இதையும் படியுங்கள்:
வித்தியாசமான ருசியில் மரவள்ளிக் கிழங்கு உணவுகள்!
Healthy snacks

சுவையான காலை டிபன் காரா பாத் ரெசிபி

தேவையான பொருட்கள்:

1.ரவை 1 கப்

2.நறுக்கிய கேரட் ¼ கப்

3.நறுக்கிய பீன்ஸ் ¼ கப்

4.நறுக்கிய வெங்காயம் ¼ கப்

5.நறுக்கிய தக்காளி ¼ கப்

6.பச்சைப் பட்டாணி ¼ கப்

7.கீறிய பச்சை மிளகாய் 2

8.எண்ணெய் 6 டீஸ்பூன்

9.துருவிய இஞ்சி 1 டீஸ்பூன்

10.கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்

11.சீரகம் 1 டீஸ்பூன்

12.முந்திரிப் பருப்பு 10

13.கடுகு ½ டீஸ்பூன்

14.கறிவேப்பிலை 2 இணுக்கு

15.கொத்தமல்லி இலைகள் 1 கைப்பிடி

16.நெய் 1 டேபிள் ஸ்பூன்

17.உப்பு தேவையான அளவு

18.மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்

19.சிவப்பு மிளகாய் தூள் 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் கேரட், பீன்ஸ், பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேகவிடவும். பின் தண்ணீரை வடித்தெடுக்வும்.

அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயையும் அரை டேபிள் ஸ்பூன் நெய்யையும் ஊற்றவும். சூடானதும் கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு ஆகியவைகளைப் போட்டு சிறு தீயில் சிவக்க வறுக்கவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து சுருள கிளறவும்.

இதையும் படியுங்கள்:
மஷ்ரூம் குருமா: அசைவ உணவுக்கு நிகரான சைவ விருந்து!
Healthy snacks

பிறகு ரவையைப் போட்டு கலந்துவிடவும். அதில், காய்கறி வேகவைத்த தண்ணீரையும் சேர்த்து மூன்று கப் அளவு நீர் மற்றும், காய்கள் சேர்த்து ரவையை 5 நிமிடம் வேகவிடவும். பின் அரை டேபிள் ஸ்பூன் நெய்யை மேற் பரப்பில் ஊற்றி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் தூவி அலங்கரிக்கவும். சூடான சுவையான காரா பாத் தயார். தேங்காய் சட்னி தொட்டு உட்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com