
Corianderதேவையான பொருட்கள் :
மைதா ஒரு கப் (150gm)
லேசாக புளித்த தயிர் அரை கப்
தண்ணீர் அரை கப்
பேகிங் பவுடர் அரை ஸ்பூன்
உப்பு தேவையான அளவு.
அலங்கரிக்க :
ஆவின் வெண்ணெய் 2ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லை தழை.
செய்முறை :
முதலில் மைதா, உப்பு பேகிங் பவுடர் மூன்றையும் ஒன்றாக சல்லடையில் எடுத்துக் கொண்டு மாவு பிசைய இருக்கும் பாத்திரத்தில் சலித்துக் கொள்ளவும்.
தயிறை நீருடன் சேர்த்து கெட்டியாக அடித்துக் கொள்ளவும்.
தயிறை மாவில் சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
இந்த மாவை காற்று புக்த டப்பாவில் வைத்து 4-5மணி நேரத்திற்கு ஊறவிடவும்.
குல்ச்சா செய்ய வேண்டிய தவா வை சூடாக்கவும்.
தாளிக்கும் கரண்டியில் வெண்ணெயை உருக்கி, பூண்டை லேசாக மணம் வரும் வரை வதக்கவும்.
இதனுடன் கொத்தமல்லி தழை சேர்த்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
இப்போது,மாவை சப்பாத்திகளாக இட்டு சூடான தவாவில் எண்ணெய் தடவாமல் சுடவும்.
அடிப்பக்கம் திருப்பி போட்டதும் நன்றாக உப்பிக் கொண்டு வரும்.
அதை ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு மேலே வெண்ணெய் பூண்டு வதக்கியது தடவவும்.
மேலே சொன்ன அளவிற்கு தடிமனாக 4 குல்ச்சா வரும்.
தகுந்த சைட் டிஷ் உடன் பரிமாறவும்
மாறுபாடுகள்:
1.வெங்காயம் பொடியாக நறுக்கி மசாலா தூள் கலந்து மாவின் ஒரு பக்கம் மட்டும் ப்ரெஸ் செய்தால் ஆனியன் குல்ச்சா.
2.பனீர் ஐ உதிர்துக் கொண்டு கரம் மசாலா, உப்பு சேர்த்துக் கலந்து stuffசெய்தால் பனீர் குல்ச்சா.
இதே போல் பல காய்கறி மசாலா வை stuff செய்தால் காய்கறி குல்ச்சா.
குளிர்காலத்தில் நன்கு புளித்த தயிரும்,கோடையில் லேசாக புளித்த தயிரும் சேர்க்கவும்.