சுவையான பால் கேசரி செய்வது எப்படி ?

சுவையான பால் கேசரி செய்வது எப்படி ?

Published on

தேவை:

சேமியா, ரவை - தலா அரை கப்

பால் - 3 கப்

சர்க்கரை - ஒன்றரை கப்

நெய் - 3 ஸ்பூன்

முந்திரிப் பருப்பு - ஒரு ஸ்பூன்

ஏலக்காய் - 4 

உலர் திராட்சை - ஒரு ஸ்பூன்

கேசரி பவுடர் - ஒரு பின்ச்

செய்முறை:

வாணலியில் நெய் சிறிதளவு விட்டு சேமியா, ரவையைத் தனித்தனியாக சிவக்க வறுக்கவும். பிறகு, அதே வாணலியில் மீதமுள்ள நெய் விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பிறகு சேமியா, ரவையைச் சேர்த்து பாலிலும் வேக விடவும். இதனுடன் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். தண்ணீருக்குப் பதில் முழுக்க முழுக்க பால் பயன்படுத்துவதால் மிகுந்த சுவையுடன் இருக்கும்.

அதில் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சை யை சேர்த்து கிளறி இறக்கி னால், பால் ரவா கேசரி ரெடி!

logo
Kalki Online
kalkionline.com