வீட்டிலேயே சுவையான பன்னீர் ரோஜா குல்கந்த் செய்வது எப்படி?

ரோஜா குல்கந்த்
ரோஜா குல்கந்த்

ம் அனைவருக்குமே குல்கந்த் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். ரோஜாக்களால் செய்யப்படும் இனிப்பு வகையாகும். குல்கந்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது.

லோரிகள் குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக கொண்டது.

பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.

வாயில் வரும் அல்சர் பிரச்சனைகளை போக்கும்.

பேதி போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.

டலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கும்.

டலில் உள்ள அமிலத்தன்மையையும் நெஞ்செரிச்சலையும் போக்கும்.

குல்கந்தை தினமும் சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாகும். உணவு உண்ட பின் குல்கந்தை எடுத்து கொள்வது சிறந்ததாகும். இத்தகைய மருத்துவ குணம் கொண்ட குல்கந்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் ரோஜா-1/4 கிலோ.

ஜீனி- 4 தேக்கரண்டி.

தேன்- 3 தேக்கரண்டி.

சோம்பு தேவையென்றால்- 2 தேக்கரண்டி.

செய்முறை:

முதலில் பன்னீர் ரோஜாவை கழுவி உலர்த்தி வைக்கவும். பின்பு இதழ்களை தனிதனியாக பிரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு ரோஜா இதழ்களை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயை எடுத்து வைத்து அதில் ரோஜா இதழ்களை போடவும். பின்பு 4 தேக்கரண்டி ஜீனி, இரண்டு தேக்கரண்டி சோம்பு, வேண்டுமென்றால் சேர்க்கலாம். பிறகு தேன் மூன்று தேக்கரண்டி சேர்க்கவும். இப்போது இதை மிதமான சூட்டில் வைத்து கிண்டவும். ரோஜா இதழ்கள் நன்றாக சுருண்டு வரும் வரை கிளறி எடுக்கவும். இந்த இனிப்பை நல்ல டைட்டான கன்டேயினரில் போட்டு பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com