
முதுகு வலி மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் உனக்கு கோதுமையை வறுத்து பொடித்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வர வலி குறையும்.
கொலஸ்ட்ராலை குறைக்க கோதுமை கஞ்சி சிறந்த உணவு.
கோதுமை மாவில் கஞ்சி காய்ச்சி அருந்துவதால் மாதவிடாய் சீரடையும்.
கோதுமை மலட்டுத்தன்மை, மலச்சிக்கலை போக்கும் .
இக்கஞ்சியை அடிக்கடி அருந்த நரம்புகள் வலுப்பெறும்.
பெண்களுக்கு கற்பக்காலத்தில் ஏற்படும் கால் வீக்கத்தைக் குறைக்கிறது.
வேர்க்குரு வால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை நீரில் கலந்து வேர்க்குரு மேல் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் நல்ல பலன்களை தரும்.
கோதுமை கஞ்சி செய்து சாப்பிட காசநோய் உள்ளவர்கள் விரைவில் உடல்நலம் தேறி வருவார்கள்.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க கோதுமை கஞ்சி உதவும்.
ஊட்டச்சத்து குறைப்பாட்டை சரிசெய்கிறது.
ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
மாதவிலக்கு காலத்தில் ஏற்படுகின்ற அதிகப்படியான ரத்தப்போக்கை குறைக்கும்.