சூப்பர் டேஸ்ட்டில் எளிதான மைசூர் பர்ஃபி செய்யலாமா?

மைசூர் பர்ஃபி
மைசூர் பர்ஃபிImage credit - indiamart.com

வீடுகளில் விசேஷம் என்றாலே கடலைமாவில் செய்த மைசூர்பாகு நாவில் கரையும் வண்ணம் அந்த காலத்திலிருந்து இந்த காலத்தில் வரை இலைகளில் இடம் பிடிக்கும். சிலர் மைசூர் பாகு செய்வதற்கு சிரமமாக இருக்கும் என்று எண்ணி அதை செய்யாமலும் விட்டு விடுவதுண்டு. ஒரு சிலர் செய்து பார்த்து பக்குவம் வராமல் சலிப்பதும் உண்டு. இரண்டு பீஸ் கடையிலேயே வாங்கி சாப்பிட்டு விடலாம் என்று எண்ணும் அளவுக்கு கூட சிலர் இந்த மைசூர் செய்ய முடியாமல் தவிப்பதுண்டு.

அவர்களுக்காகவே மைசூர் பர்ஃபி எனும் ஈசியான இந்த ரெசிபி. எளிமையாகவும் ரிச்சாகவும் சத்தான ஸ்வீட்டாகவும் செய்யலாம். மைசூர் அரண்மனை உணவுக் கலைஞரால் செய்யப்பட்டு அரசருக்கும் சுவை பிடித்து போய் இப்பண்டத்தின் பெயர் என்னவென்று கேட்க "நளபாக்" என்று அந்தக் கலைஞர் சொல்ல மைசூர் அரண்மனையில் மைசூர் பாகு என்று நான்காம் கிருஷ்ணராஜ உடையார் பெயர் சூட்டினார்.

தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
சக்கரை -2 1/2 கப் 
வெண்ணெய்-  2 கப்
குங்குமப்பூ - சிறிது
தண்ணீர் - 2 கப்

செய்முறை;
ஒரு  அடி கனமான கடாயில் சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்து சூடாக்கி நன்கு கிளறிக் கொதித்து சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பதத்துக்கு பாகு வந்ததும் இதில் சலித்து தயாராக உள்ள கடலை மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கட்டிகளின்றி கைவிடாமல் கிளறவும். (தீயை குறைத்து வைக்கவும்) உருக்கிய வெண்ணையையும் இதில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும். 

இதையும் படியுங்கள்:
புரிதல் இருந்தாலே மகிழ்ச்சி பூரிக்கும்!
மைசூர் பர்ஃபி

மொத்த வெண்ணெயையும் இப்படி சேர்த்து கலவை அதை அனைத்தையும் இழுத்துக் கொண்டதும் கைகளால் பொடித்த குங்குமப்பூ சேர்க்கவும். கலவை வெண்ணெயுடன் நன்கு சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாமல் பிரிந்து வரும்போது அடுப்பிலிருந்து கீழே இறக்கி வெண்ணெய் தடவி அல்லது பட்டர் பேப்பர் போட்ட சதுரமான ஸ்வீட் பிளேட்டில் கொட்டவும். கொஞ்சம் ஆறியதும் தேவையான வடிவத்தில் துண்டுகள் போட்டு மீட்டும் ஆறவிடவும். முற்றிலும் ஆறியதும் தட்டைத் தலைகீழாகக் கவிழ்த்தால் துண்டுகள் தனியே வரும். பிறகு எடுத்து சுவைக்கலாம்.

இதற்கு உண்டான குறிப்புகள் சிலவற்றை இங்கு காண்போம்.  கடலைமாவை பச்சை வாசனை போக வெறும் வாணலில் வறுத்து ஆறவைத்து சிறு கண் சல்லடையில் நன்றாக  கட்டிகள் இல்லாமல் சலித்துக் கொள்ள வேண்டும்.  வெண்ணையை மிகக் குறைந்த தீயில் வைத்து லேசாக உருக்கவும். அதேபோல் தயாரான கடலைமாவு கலவையை சட்டென்று கொட்டுவதற்கு ஏதுவாக அதற்கான ட்ரேயில் வெண்ணெய் தடவி தயாராக வைக்க வேண்டும்.

இந்த மைசூர் பர்ஃபியை அடுப்பை சிம்மில் வைத்துத்தான் செய்ய வேண்டும்.   கலவையைக் கொட்டும் வரை கைவிடாமல்  கவனமாக கிளற வேண்டியது மிக முக்கியமானது. சிறிது அசந்தாலும் பதம் மாறிவிடும். விருப்பப்பட்டால் மட்டும் சர்க்கரை பாகில் சிறிது ஏலக்காய் தூள் சேர்க்கலாம். பொதுவாக  ஏலக்காய்த்தூள் தேவையில்லை. அதேபோல் வெண்ணைய்க்கு பதில் நெய் சேர்ப்பவர்கள் உண்டு. ஆனால் வெண்ணைய் சேர்த்து செய்வதால் இந்த மைசூர் பர்ஃபி இன்னும் மென்மையாக ருசியாக சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இந்த விடுமுறையில் தைரியமாக செய்து அசத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com