கொள்ளு இட்லி, முள்ளங்கி சட்னி!

கொள்ளு இட்லி, முள்ளங்கி சட்னி!

-அபிராமி ஸ்ரீ

கொள்ளு இட்லி செய்யத் தேவையான பொருட்கள்

கொள்ளு - 1/2 கப்

இட்லி அரிசி - 1/2 கப்

உளுந்தம் பருப்பு - 3 மேசைக்கரண்டி

தேவையான அளவு - உப்பு

செய்முறை :

கொள்ளைக் கழுவி எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

அரிசி, உளுந்தம் பருப்பைக் கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

கொள்ளு ஊறியதும் அதோடு உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். அரிசியைத் தனியே அரைக்கவும்.

அரைத்த மாவுகளைத் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

ஆறுமணி நேரம் கழித்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு மாவைக் கரைத்துக் கொண்டு இட்லி ஊற்றவும்.

சூடான கொள்ளு இட்லியோடு முள்ளங்கி சட்னி அல்லது சாம்பாரோடு பரிமாறவும்.

கத்தரிக்காய் கொத்சுடன் சாப்பிட சுவை அள்ளும்.

முள்ளங்கி சட்னி

இரண்டு முள்ளங்கி தோல் சீவி துருவி வைக்கவும்.

ஒரு தேக்கரண்டி எண்ணெயில் 4 மிளகாய் வத்தல், ஒரு தேக்கரண்டி கறுப்பு உளுந்தம் பருப்பு வறுத்து எடுக்கவும்.

துருவிய முள்ளங்கியை வதக்கி ஆற வைக்கவும்.

ஆறியதும் அனைத்தையும் தேவையான அளவு உப்பு, சிறு துண்டு புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com