வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி.. சத்துமாவு கொழுக்கட்டை செய்ய டிப்ஸ்!

சத்துமாவு கொழுக்கட்டை
சத்துமாவு கொழுக்கட்டை
Published on

ஆண்டுதோறும் இந்துக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகை விநாயகர் சதுர்த்தி. தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இந்தப் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

விநாயகப்பெருமானின் அவதார நாளையே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம். அந்த நாளில் கணபதி சிலையை வைத்து வணங்கினால் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. பூஜைக்குப் பிறகு கணபதி சிலையை அனைவரும் ஆற்றில் கொண்டு சென்று கரைப்பார்கள்.

அப்படி கொண்டாடப்படும் இந்த சிலைக்கு பல பலகாரங்கள் படைப்பார்கள். அதுவும் குறிப்பாக விநாயகரின் ஃபேவரிட் ஆன கொழுக்கட்டை, லட்டு ஆகியவை லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கும். விநாயகருக்கு படைக்கும் கொழுக்கட்டையை நாம் தானே சாப்பிட போகிறோம். எப்போது ஒரே மாதிரியான கொழுக்கட்டை செய்து பலருக்கும் சளித்து போயிருக்கும். அதனால் ஈஸியாகவும், குழந்தைகளுக்கு சத்தானதாகவும் கொடுக்க சத்துமாவு கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பலரும் வீட்டில் எப்போது சத்துமாவு வைத்திருப்பார்கள். அதுவும் கிராமப்புறங்களில் தமிழக அரசே வீடு வீடாக சத்துமாவு கொடுக்கிறது. அதை வைத்து கூட இந்த கொழுக்கட்டையை செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

சத்துமாவு - 1 கப்

அவல் - ¼ கப்

தேங்காய் - 2 பெரிய துண்டுகள்

ஏலக்காய் - 2

நாட்டு சர்க்கரை - ½ கப்

நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு மிக்ஸர் ஜாரில் அவல் மற்றும் ஏலக்காய் சேர்த்து பொடித்து கொள்ளவும். இதனுடன் தேங்காய் துண்டுகளை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

அரைத்த கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

இதனுடன் சத்துமாவு, நாட்டு சர்க்கரை, நெய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும். தேங்காய், நாட்டு சர்க்கரை, மாவு எல்லாம் ஒன்று சேர்ந்து நன்கு கலக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து, கொழுக்கட்டை பிடிக்கும் பதம் வரும் அளவிற்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீரை ஒரே சமயத்தில் அதிகமாக சேர்த்து விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக கவனமாக சேர்க்கவும். இந்த கொழுக்கட்டை செய்வதற்கு சூடான தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண நீரை பயன்படுத்தினால் போதுமானது. தயாராக வைத்துள்ள மாவை பிடி கொழுக்கட்டை போல பிடித்து வைக்கவும்.

பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரில் 10 நிமிடத்திற்கு வேகவைத்து கொள்ளவும். அவ்வளவு சுவையான சத்தான கொழுக்கட்டை தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com