மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை இஞ்சி பச்சடி எப்படி செய்வது?

இஞ்சி பச்சடி
இஞ்சி பச்சடிrecipes.behindtalkies.com

ஞ்சியை அப்படியே சாப்பிட இயலாதவர்கள் இஞ்சி பச்சடி செய்து சாப்பிடலாம். சுவையான இஞ்சி பச்சடியை எளிமையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்:

பொடியாக நறுக்கின இஞ்சித் துண்டுகள் - அரை கப்

புளி - எலுமிச்சை அளவு

மிளகாய்த்தூள் - 4 ஸ்பூன்

பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

வெல்லம் - ஒரு சிட்டிகை

வெந்தயம் - 1 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

கறிவேப்பிலை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஞ்சி பச்சடி செய்வதற்கு முதலில் இஞ்சியை தோல் நீக்கி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, கெட்டியாக கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் நறுக்கி வைத்துள்ள இஞ்சியை போட்டு நிறம் மாறும்வரை பொரித்துக்கொள்ளவும். அடுத்து பொரித்து வைத்துள்ள இஞ்சி துண்டுகளை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக்கொள்ளவும்.

பின்பு கரைத்து வடிகட்டி வைத்துள்ள புளிக்கரைசலில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை போட்டு கலக்கி வைத்துக்கொள்ளவும்.

அடுத்து மற்றொரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்து, அதில் புளிக்கரைசலை ஊற்றி மிதமானத் தீயில் வைத்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். புளிக்கரைசல் பாதியளவு சுண்டியதும் அரைத்து வைத்துள்ள இஞ்சி கலவையைப் போட்டு கலக்கி விடவும்.

இஞ்சி கலவை நன்றாக சுண்டி, எண்ணெய் மேலே மிதக்கும் வரை கொதிக்கவிட்டு, கடைசியில் வெல்லம் சேர்த்து கலக்கி இறக்கினால் சுவையான இஞ்சி பச்சடி ரெடி.

இஞ்சி டீ
இஞ்சி டீ pixabay.com

இஞ்சியின் மருத்துவ பயன்கள்:

காலையில் எழுந்தவுடன் இஞ்சி டீ குடிப்பது நல்லது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் இஞ்சி டீ குடிப்பதால் வாந்தி, பித்தம் போன்றப் பிரச்னைகள் வராது. ஏனெனில் காலை வேளையில் ஏற்படும் மசக்கையை தடுக்க இஞ்சி டீ ஒரு மிக சிறந்த இயற்கை மருந்தாகும்.

இதையும் படியுங்கள்:
ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் அன்னாசி பூ! 
இஞ்சி பச்சடி

முற்றிய பசுமையான இஞ்சியின் மேல் தோலைச் சீவி நீக்கவும். பின்னர், சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமான தேனில், இஞ்சித் துண்டுகள் மூழ்கியிருக்குமாறு ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பின்னர், தினமும் இரண்டு துண்டுகள் வீதம், உணவிற்கு முன்னர் மென்று சாப்பிட்டு வர பசியின்மை, வயிற்றுப் பொருமல் போன்ற பிரச்சனைகள் தீரும்.

ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுடு தண்ணீரில் ஆவி பிடிக்கும் போது, தண்ணீரில் சிறிதளவு இஞ்சி துண்டு அல்லது இஞ்சியின் சாறு இரண்டு டீஸ்பூன் கலந்து நன்கு கொதிக்க விட்டு ஆவி பிடித்தால் ஜலதோஷத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com