தேவையான பொருட்கள்:
தோசை மாவு மாவு - இரண்டு கப்
பனீர் - ஒரு கப்,
நறுக்கிய முட்டைக்கோஸ் - கால் கப்
நறுக்கிய வெங்காயம் - அரை கப்
நறுக்கிய குடைமிளகாய் - கால் கப்
நறுக்கிய தக்காளி - 3
நசுக்கிய பூண்டு - 4
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் - அரை ஸ்பூன்
சோயா சாஸ் - ஒரு ஸ்பூன்
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், குடைமிளகாய், முட்டைக்கோஸ் போட்டு இரண்டு நிமிடங்களுக்கு வேகவைக்கவும், அதில் நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து டொமேட்டோ கெட்சப், நசுக்கிய பூண்டு, சோயா சாஸ், கரம் மசாலா தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக கிளறவும். சிறிதளவு நீர் தெளித்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். சுத்தம் செய்த பனீரை சேர்த்து இரண்டு இரண்டு நிமிடங்களுக்கு வேக வைக்கவும். இப்போது தோசைக்கு தேவையான மசாலா ரெடி.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து அது சூடானதும் ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றவும். அதன் மேல் நெய்யை பரவலாக விடவும். லேசாக தோசை வெந்ததும் செய்து வைத்திருந்த பனீர் சில்லி ஸ்டஃபிங் ஒரு ஸ்பூன் எடுத்து தோசை முழுக்க பரவுமாறு தூவவும். ஒரு நிமிடம் அதை வேகவைத்து தோசையை நன்றாக மடித்து ரோல் போல செய்து தட்டில் வைத்து பரிமாறவும். சுவையான பனீர் தோசை ரெடி.