பஞ்சாபி ஸ்பெஷல் தால் மக்கானி எப்படி செய்வது?

தால் மக்கானி
தால் மக்கானிwww.youtube.com

தேவையான பொருட்கள்;

தோலுடன் கூடிய முழு கருப்பு உளுந்து 1/2 கப்

சிவப்பு ராஜ்மா- கால் கப்

சிவப்பு மிளகாய் தூள் - 1ஸ்பூன்

கொத்தமல்லி தூள் - ஒன்றரை ஸ்பூன்

மஞ்சள் தூள் அரை ஸ்பூன்

கரம் மசாலா தூள் -  2 ஸ்பூன்

பெரிய வெங்காயம் -ஒன்று

பெரிய சைஸ் தக்காளி - ஒன்று

பால் - அரைக்கப்

வெண்ணெய் ஒரு - ஸ்பூன்

பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன்

பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு ஸ்பூன்

இலவங்கப்பட்டை -ஒன்று

கிராம்பு - ரெண்டு

பிரியாணி இலை ஒன்று

சீரகம் - ஒரு ஸ்பூன்

எண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை;

உளுத்தம் பருப்பையும் ராஜ்மாவையும் குறைந்தது 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் தண்ணீரை வடித்து அலசிக் கொள்ளவும். குக்கரில் போட்டு   பருப்புகள் மூழ்கும் அளவு தண்ணீரை ஊற்றவும். ஐந்தாறு விசில் விட்டு வேக வைக்கவும். சுவைக்காக ஒரு ஸ்பூன் வெந்த சாதத்தை சேர்க்கவும். 

தண்ணீரை வடித்து விட்டு பருப்பை கரண்டியால் நன்றாக கடைந்து கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். தக்காளியை கழுவி மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
போட்டோக்ஸ் ஊசி போட்டுக்கப் போறீங்களா? அப்போ கட்டாயம் இதைத் தெரிஞ்சிக்கணும்!
தால் மக்கானி

ஒரு அடி கனமான வாணலியில்  எண்ணெய் சேர்த்து சூடான பின்பு கடுகு கருவேப்பிலை சீரகம் போட்டு தாளிக்க வேண்டும். பின்பு பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பச்சை மிளகாயையும் கீறி வதக்கவும் .வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தக்காளி ஜூஸ் இதில் ஊற்றவும். மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை  வதக்கவும். பருப்பிலிருந்து வடிகட்டிய தண்ணீரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்பு மசித்த பருப்பை சேர்த்து கலக்கவும். கடைசியாக பால் அல்லது வெண்ணை சேர்த்து கலக்கவும். குறைந்த தீயில் இரண்டு நிமிடங்கள் வேகவைத்து கிளறி விடவும்.

இப்போது சுவையான பஞ்சாபி ஸ்பெஷல் தால் மக்கானி ரெடி. இது சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள ஏற்ற சைட் டிஷ் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com