திருப்பதி லட்டு வாங்க இனி திருப்பதிக்கு செல்ல வேண்டாம்! 

Tirupati laddu
Tirupati laddu
Published on

திருப்பதி லட்டு என்றாலே நம் நாக்கில் நீர் ஊரும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தயாரிக்கப்படும் இந்த லட்டின் சுவை மற்றும் மணம் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆனால், திருப்பதி கோவிலுக்குச் சென்றால் மட்டுமே இந்த லட்டை வாங்கி நாம் சுவைக்க முடியும்.‌ இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்.திருப்பதி லட்டு சுவையை அப்படியே அச்சடித்தது போல வீட்டிலேயே நாம் லட்டு தயாரிக்க முடியும். அது எப்படி என இந்தப் பதிவில் பார்க்கலாம்.‌ 

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு - 250 கிராம்

  • சர்க்கரை - 500 கிராம்

  • பால் - 100 மிலி

  • முந்திரி - 25 கிராம்

  • ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்

  • உலர் திராட்சை - 25 கிராம்

  • ஜாதிக்காய் பொடி - சிறிதளவு 

  • எண்ணெய் – தேவையான அளவு

  • பச்சை கற்பூரம் சிறிதளவு

  • நெய் – 2-3 டீஸ்பூன்

  • கற்கண்டு 25 கிராம்

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சர்க்கரையை சேர்க்க வேண்டும். பின்னர், அதில் கால் லிட்டர் தண்ணீர் விட்டு சர்க்கரை பாகு தயாரிக்கவும். இது நாம் சராசரியாக செய்யும் சர்க்கரை பாகு போல கெட்டியாக இருக்கக் கூடாது. தண்ணீரில் சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும். 

பின்னர், கடலை மாவில் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடாயின் மேல் ஒரு சல்லடை வைத்து அதில் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்ற வேண்டும். இதில், சிறு சிறு துளிகளாக எண்ணெயில் விழுந்து பூந்தியாக மாறிவிடும். பூந்தி பொன்னிறமாக மாறியதும் உடையாமல் எடுத்து உடனடியாக சர்க்கரைப்பாகில் ஊற வைக்கவும். 

இதையும் படியுங்கள்:
கோபத்தைத் தணித்து மனதை சாந்தப்படுத்தும் உலர் திராட்சை!
Tirupati laddu

அப்படியே கடாயில் இருக்கும் எண்ணெயில் திராட்சை, கிராம்பு, முந்திரி ஆகியவற்றை போட்டு பொரித்தெடுத்து பூந்தியில் சேர்த்துக் கிளறவும். அடுத்ததாக பூந்தி கலவையில் ஜாதிக்காய் பொடி, கற்கண்டு, பச்சை கற்பூரம், ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து, சர்க்கரை பாகிலேயே பூந்தியை 1 மணி நேரம் அப்படியே ஊற விடவும். 

சர்க்கரைப்பாகில் பூந்தி நன்கு ஊறி மேலே பொங்கி வந்ததும், அதில் நெய் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.‌ அதன் பிறகு நீங்கள் விரும்பும் படி பூந்தியை எடுத்து உருண்டைகளாகப் பிடித்தால், திருப்பதி லட்டு தயார். இது நிச்சயமாக திருப்பதி லட்டு சுவையில் இருக்கும். இந்த ரெசிபியை ஒரு முறை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com