கோதுமை அதிரசம்
தேவை:
கோதுமைமாவு 2கப்
வெல்லத்தூள் 2கப்
ஏலக்காய்தூள் அரை ஸ்பூன்
பொரிக்க நெய் அல்லது எண்ணெய்.
செய்முறை:
2கப் நீரில் வெல்லத்தூளைப் போட்டு கரைந்ததும் வடிகட்டி, மறுபடியும் கொதிக்க வைத்து இறக்கி கோதுமை மாவைக் கொட்டிக் கிளறி மூடி வைக்கவும். சில நிமிடங்கள் கழித்து ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி அதிரசமாய்த் தட்டி, தவாவில் போட்டு நெய் அல்லது எண்ணெயில் வேக வைத்து எடுக்கவும். சுவையான, ஹெல்த்தியான கோதுமை அதிரசம் ரெடி.