வெண் தாமரை அப்பளம் செய்வது எப்படி?

வெண் தாமரை அப்பளம் செய்வது எப்படி?

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தேவையான பொருட்கள்:

வெள்ளை தாமரைப்பூ - 2

உளுந்த மாவு - 100 கிராம்

பெருங்காயத் தூள் - 1 ஸ்பூன்

மிளகுத் தூள் - 1 ஸ்பூன்

சீரகம் சிறிது 

இந்துப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

தாமரைப்பூவின் இதழ்களைத் தனித் தனியாகப் பிரித்துக்கொள்ளுங்கள். உளுந்த மாவில் பெருங்காயத் தூள், சீரகம், தேவையான அளவு இந்துப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாமரைப்பூவின் ஒவ்வோர் இதழாக மாவில் தோய்த்துப் பொரித்தெடுங்கள். சுவையான, சத்தான மொறு மொறு வெண்தாமரைப்பூ அப்பளம் தயார்.

logo
Kalki Online
kalkionline.com