இதையெல்லாம் தெரிந்திருந்தால் நீங்கள் குக்கிங் எக்ஸ்பர்ட்தான்!

If you know all this, you are a cooking expert!
healthy samayal tips
Published on

நீங்கள் கார்த்திகைக்கு உருண்டைகள் தயாரிக்க கையில் நெய் தடவி பிடித்தால் சுலபமாக இருக்கும். தயாரித்த உருண்டைகளை ப்ரிட்ஜ்ஜில் ஒரு மணிநேரம் வைக்க அவை கெட்டிப்படும்.

கோதுமை ரவை உப்புமாவிற்கு தேவையானவற்றை எண்ணையில்   வறுக்கவும். பிறகு காய்கறிகளை அரிந்து எண்ணையில் வதக்கி ஒரு அகலமான பாத்திரத்தில் ரவையை ஒன்றிற்கு இரண்டரை தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து  வைத்து அதன் மேல் ஒரு தட்டில் வதக்கிய காய்கறிகளில் தண்ணீர் தெளித்து வைக்கவும். பிறகு இரண்டையும் வாணலியில் சேர்த்துக் கிளற சுவையாக இருப்பதுடன் உதிரியாகவும் வரும்.

அரிசி உப்புமா சுவையாக இருக்க...

ஒரு கைப்பிடி துவரம்பருப்பு ஊறவைத்து அத்துடன் வற்றல் மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து அரிசி உப்புமாவிற்கு தாளித்தவுடன் தண்ணீர் சேர்க்கும் போது இந்த விழுதை சேர்த்து 5நிமிடம் கழித்து உப்புமா ரவை சேர்த்துக்கிளற உப்புமா மிகச் சுவையாக இருக்கும.

எந்த பொங்கல் செய்வதாக இருந்தாலும்  பயத்தம் பருப்பு மற்றும் அரிசியை தனித்தனியாக குக்கரில் வைத்தால் குழைய வரும். இரண்டையும் சேர்த்து வைத்தால் கட்டி கட்டியாக ஆவதை தடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
இனிய வாழ்வு தரும் கசப்பான உணவுகள்..!
If you know all this, you are a cooking expert!

சர்க்கரை வள்ளிக் கிழங்கை சுட்டு தோலுரித்து அதை நன்கு பிசைந்து கோதுமை மாவு சேர்த்து ஸ்வீட் சப்பாத்தி செய்ய சுவையாக இருக்கும்.

ரவா உப்புமா தயாரிக்கும்போது புளித்த மோர் சேர்க்க சுவையாக இருக்கும்.

அரிசி மாவு மற்றும் ராகி மாவுகளில் மோர்களி செய்ய மோரை அப்படியே மாவில் சேர்க்காமல் சிறிது சுடவைத்து சேர்த்து களி தயாரிக்க கட்டி தட்டாமல் வரும்.

உப்புமா கொழுக்கட்டை தயாரிக்கும்போது பொடியாய் அரிந்த காரட் பீன்ஸ் மற்றும் பட்டாணி சேர்த்து வெஜிடபிள் உப்புமா கொழுக்கட்டையாக தயாரித்தால் குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடுவார்கள்.

அரிசி மாவில் இடியாப்பம் தயாரிக்ககொதிக்கும் நீரில் தேங்காய் எண்ணை இரண்டு டேபிளா ஸ்புன்சேர்த்து மாவை பிசைந்து தயாரிக்க இடியாப்பம் சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com