இன்ஸ்டன்ட் மொறு மொறு ஜிலேபி!

இன்ஸ்டன்ட் மொறு மொறு ஜிலேபி!

தீபாவளி நெருங்க, நெருங்க என்ன ஸ்வீட் செய்யலாம் எப்படி செய்யலாம் என்றெல்லாம் இப்போதிலிருந்து பிளான் பண்ண ஆரம்பிப்போம். ஜிலேபி பொதுவான ஸ்வீட் ஆனாலும் வீட்டில் செய்யத் தயங்குவதுண்டு. சரியா வருமா இல்லையா என்று ஒரு எண்ணம் இருக்கும். இதோ இந்த முறை தயங்காமல் உளுந்துக்கு பதில் மைதாவில் செய்யப்படும் இந்த இன்ஸ்டன்ட் ஜிலேபியை செய்து பாருங்கள்.

ஜிலேபி மாவுக்குத் தேவையானவை:
மைதா -  அரை கப்
கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன்
தயிர் - ஒரு டீஸ்பூன்
தண்ணீர் -  கால் கப்
ஆரஞ்சு ஃபுட் கலர்  -  சிறிது
ஃப்ரூட் சால்ட் ( ஈனோ) -அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு - கால் டீஸ்பூன்
ரீபைண்ட் எண்ணெய் - பொரிப்பதற்கு

பாகு செய்யத் தேவையானவை:
சர்க்கரை - முக்கால் கப்
எலுமிச்சைச்சாறு-  அரை டேபிள் ஸ்பூன் தண்ணீர்-   கப்

செய்முறை:
ஒரு கடாயில் தண்ணீரையும் சர்க்கரையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதிக நேரம் விடாமல் ஒரு கம்பி பதத்துக்கு பாகு தயாரித்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து தனியே வைக்கவும்.


கடாயில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெயை (நெய் என்றாலும் பரவாயில்லை) சூடாக்கவும். எண்ணெய் சூடாவதற்குள் ஜிலேபி மாவைத் தயார் செய்வோம்.  
சலித்த மைதாவில் கார்ன்ஃப்ளார், தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். கூடவே வினிகருடன் ஃபுட் கலர் மற்றும் ஃப்ரூட் சால்ட் சேர்த்து தேவைப்படும்  தண்ணீரையும்  சிறிது சிறிதாக சேர்த்து தளர மாவைக் கலக்கவும்.


ஜிலேபி பிழிகிற துளைகளிட்ட துணி அல்லது நீளமான பாலிதின் பையில் செய்த கோனில் மாவை நிரப்பி எண்ணெய் காய்ந்ததும் அதில் நேரடியாக ஜிலேபிகளை பிழியவும். இரண்டு பக்கங்களிலும் பொன்னிறமானதும் எடுத்து எண்ணெய் வடிந்ததும் சிறிது நேரம் கழித்து பாகில் போட்டு சிறிது நேரம் விட்டு எடுத்து சூடாகவோ அல்லது வைத்திருந்தோ ருசிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com