
சில சமயம் திடீரென ஏதாவது ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு வந்துவிடும். பார்பி, மைசூர்பா இதெல்லாம் செய்வதற்கு சிறிது நேரம் எடுக்கும். அதுவே இந்த மாலாடு செய்வதென்றால் நிமிடத்தில் செய்து சாப்பிட்டும் விடலாம். திடீர் விருந்தாளிகளையும் சமாளிக்க உதவும். செய்வது ரொம்ப ரொம்ப சுலபம்.
மாலாடு:
பொட்டுக்கடலை ஒரு கப்
சக்கரை 3/4 கப்
ஏலக்காய் 2
முந்திரிப்பருப்பு 10
நெய் சிறிது
பொட்டுக்கடலையை வாணலியில் சிறிது சூடு செய்து நைசாக பொடிக்கவும். சர்க்கரையை தனியாக ஏலக்காயுடன் சேர்த்து பொடிக்கவும். இரண்டையும் ஒன்றாக கலந்து கொண்டு வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரிப் பருப்பை உடைத்து போட்டு வறுத்து கொட்டி உருண்டைகளாக அழுத்தி பிடிக்கவும். ருசியான மாலாடு நிமிடத்தில் தயார்.
ஸ்வீட்டுடன் காரமும் சேர்த்து சாப்பிட்டால் தானே ருசிக்கும்.
ஓல பக்கோடா:
கடலை மாவு ஒரு கப்
அரிசி மாவு ஒரு கப்
உப்பு சிறிது
காரப்பொடி ஒரு ஸ்பூன்
நெய் அல்லது வெண்ணெய் 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் சிறிது
எல்லாவற்றையும் சிறிது நீர் விட்டு கலந்து பிசைந்து எண்ணெய் காய்ந்ததும் அச்சில் போட்டு பிழிய ஐந்தே நிமிடத்தில் ரெடி.