வனஸ்பதி முதல் டால்டா வரை: பாமாயிலின் மாறுபட்ட வடிவங்கள்!
5000 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஐரோப்பாவில் உள்ள காடுகளில் இருந்து அங்குள்ள பழங்குடி மக்கள் பனைமரம் போன்ற ஒரு மரத்திலிருந்து பனம் பழம் போன்ற பழங்கள் இருந்ததை எடுத்து அந்தப் பழங்களை சுத்தப்படுத்தி, காயவைத்து வேகவைத்து அதை கைகளாலேயே பிழிந்து எண்ணெய் எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
அந்த எண்ணெயில் சமையல் செய்வதையும் மேற்கொண்டார்கள். இந்த சிவப்பு நிறம் உடைய சுத்திகரிக்கப்படாத இயற்கை எண்ணையை மிகவும் நல்ல எண்ணையாக இன்றளவும் டாக்டர்கள் கூறுகிறார்கள். அது மிகவும் விலை உயர்ந்ததும் என்றும் கூறப்படுகிறது. இந்த எண்ணெயின் பயன்பாட்டை அறிந்த எகிப்தியர்களும் ஆப்பிரிக்கர்களும் பெருமளவில் இதை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.
அப்பொழுது அந்த நாட்டிற்கு வந்த ஐரோப்பியர்கள் இவர்கள் பயன்படுத்தும் இந்த எண்ணையின் பயன்பாட்டை புரிந்து கொண்டனர். அதில் குறிப்பாக பிரெஞ்சு நாட்டை சேர்ந்த மைக்கேல் ஆடம்ஸ் என்பவர் ஓர் இயற்கை தாவர ஆராய்ச்சியாளர். இதில் இருந்து எடுக்கப்படும் எண்ணையே ஐரோப்பாவில் பயன்படுத்திய பொழுது அதிகம் விற்பனையாகவில்லை.
பிறகுதான் அந்த எண்ணெயிலிருந்து தொழிற்சாலை களுக்கு பயன்படும் எண்ணெயில் முதல் அழகு சாதன பொருட்கள், சோப்பு, லிப்ஸ்டிக், பவுடர் போன்ற வழுவழுப்பான பொருள்கள் செய்வதற்கும் இதை பயன்படுத்தலாம் என்பதை கண்டுபிடித்து ஆப்பிரிக்காவில் பல ஏக்கர் கணக்கில் உள்ள காடுகளை அழித்து அதில் அந்த நாட்டு மக்களை வைத்து பயிரிட செய்தார்கள். இதனால் காட்டு விலங்குகளும் அங்கிருந்த குடி மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.
அங்குள்ள பல்வேறு செல்வங்களைக் கொண்டு சேர்த்துக் கொண்டார்கள் மிக உயர்ந்த செல்வம் மக்கள் என்பதை அறிந்து அப்பொழுது அங்கிருந்த ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக அமெரிக்காவில் குடி யேற்றினார்கள். அப்பொழுது அடிமை வணிகம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம்.
இப்படி இதில் அழகு சாதன பொருட்கள் போன்றவற்றை செய்து விற்பனை செய்ததால் ஐரோப்பா மற்றும் உள்ள நாடுகளில் இதன் பயன்பாடு அதிகமாக இருந்தது.
இதை அறிந்த ஆடம்சன் இந்த எண்ணையை சமையலுக்கு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து வைத்திருந்ததால் மலேசியா, இந்தோனேசியா போன்ற இடங்களுக்கு சென்று அங்குள்ள நாட்டில் இந்த எண்ணைய்க்கான மரங்களை வளர்த்து அதிலிருந்து எண்ணெய் எடுத்து சுத்திகரிப்பு செய்து பல்வேறு நாடுகளுக்கும் அதை ஏற்றுமதி செய்தனர். இன்றும் இந்தியாவில் 10% சதவிகித எண்ணெய் இங்கு இறக்குமதி செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது.
இந்த காயின் வெண்மையாக விதைப்பகுதியில் கிடைக்கும் எண்ணெய் துரிதவகை உணவுகளை வறுப்பதற்கும் அதன் மெஸ்காப் என்ற சதைப்பகுதியில் இருந்து கிடைக்கும் எண்ணையை சமையலுக்கும் பயன்படுத்த அதை சுத்திகரித்து அனுப்பும் தொழிலை மேற்கொண்டார்கள். அப்பொழுது இந்த பாமாயில் நல்ல விற்பனைக்கு சென்றது. அது சுத்திகரிக்கப்படும் பொழுது அதில் உள்ள சத்துக்கள் வீணாவதை அறிந்த மருத்துவர்கள் அது இதய சம்பந்தமான நோய்களை உண்டு பண்ணும் என்பதை அறிவித்தவுடன் இந்த பாமாயிலின் பயன்பாடு குறைய ஆரம்பித்தது. இந்த ஆயிலை பயன்படுத்தியவர்கள் 70 ஆயிரம் பேர் இறந்தார்கள் என்பது இன்னும் மக்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.
அதன் பிறகு மக்களின் பொருளாதார மேம்பாடும் நல்ல வளர்ச்சி பெற ஆரம்பித்த உடன் அதற்கு முன்பு வரை இது "ஏழைகளின் எண்ணெய்" என்று இருந்த நிலை மாறி இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலங்களில் விளைந்த எள், கடலை, கடுகு, தேங்காய் என்ற அதில் வரும் எண்ணெய்களை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். பாமாயில் வருவதற்கு முன்பும் இதைத்தான் பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள். சூரியகாந்தி எண்ணெய் போன்ற பல்வேறு விதமான விஜிட்டபிள் ஆயில்களை பயன்படுத்த மக்கள் நாட்டம் கொண்டனர். என்றாலும் கிடைப்பது வரை லாபம் என்று விற்று வந்தனர்.
இந்தியாவில் உசைன் டாடா என்பவர்தான் முதன் முதலில் இந்த வனஸ்பதி என்ற மஞ்சள் கலரில் பட்டர் கட்டி போன்ற வடிவில் இதை பிரபல படுத்தியிருந்தார். அப்பொழுது உருண்டை வடிவ டின்னிலடைத்து விற்பனை செய்யப்படும். நாம் கேசரி போன்ற பல்வேறு வகையான இனிப்பு பதார்த்தங்களுக்கு இதை பயன்படுத்தி இருக்கிறோம். அப்பொழுது ரேஷன் கடைகளிலும் இதை விற்பனை செய்யப்பட்டது. 30 வருட காலம் இந்தியாவில் இந்த வனஸ்பதி விற்பனை சக்கைபோடு போட்டது.
1939 ஆம் ஆண்டு வாக்கில் நெய்யை வசதியானவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்ததால் இதற்கு இந்த பாமாயிலில் ஆக்சிசனேற்றம் செய்து வெண்மையாக்கி அதை நெய்யிற்கு மாற்றாக மக்கள் மத்தியில் விளம்பரம் செய்து விற்பனை செய்ய முற்பட்டனர். அதிலும் பன்றி கொழுப்பு போன்ற கலப்பட பொருட்கள் இருப்பதாக மக்களிடம் ஒரு புரளி பரவியது. அதனால் இதயத்திற்கு கெடுதி என்று நினைத்து மக்கள் அதை வாங்குவதை நிறுத்தினர்.

