உப்பு
உப்பு

உப்பு சமையலுக்கு மட்டும்தானா? வேறு எதெற்கெல்லாம் பயன்படுகிறது பார்ப்போமா?

கி.மு.2200யில் சீனாவில்தான் உப்பு முதன் முதலாக சாப்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால், அன்றுமுதல் இன்றுவரை, உப்பு சாப்பாட்டின் சுவைக்காக மட்டும் பயன்படுவதில்லை; சமையல் மற்றும் சமையலறைச் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு உப்பு பயனாகிறது. இது பலருக்கு தெரிந்திருக்கும், தெரியாமல் இருப்பவர்கள் பயனடைய இங்கே சில டிப்ஸ்...

ற்போது மார்கெட்டிற்கு வரும் காய்கறிகள் பெரும்பாலானவை பூச்சி மருந்துகள் தெளித்து விற்பனைக்கு வருகின்றன. அவற்றை அப்படியே சமையலுக்குப் பயன்படுத்தினால் என்னாகும் தெரியுமா? மூளையின் எடை குறையும் வாய்ப்பு உள்ளது. நரம்பு மண்டல பாதிப்புக்கும் வாய்ப்புகள் உண்டு என்கிறார்கள். இதனைத் தவிர்க்க உப்பு நமக்கு உதவுகிறது. எந்தக் காய்கறிகளானலும் சரி அவற்றை உப்பு கலந்த நீரில் இரண்டு நிமிடங்கள் ஊறவைத்த பிறகு கழுவி சமைத்தால் காய்கறிகளின் மீதுள்ள பூச்சி மருந்துகளின் வீரியம் நம்மைத் தாக்காது.

சில பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க, உப்பை பயன்படுத்தி வருவது பலருக்குத் தெரியும். மண்பானையின் அடியில் புளியைப்போட்டு, அதன்மேல் சிறிது உப்பை தடவினால் புளி நீண்ட காலம் கெட்டுபோகாமல் இருக்கும். காய்ந்தும்போகாமல் இருக்கும்.

ரிசியில் தண்ணீர் பட்டால் அரிசி கெட்டுபோய் கட்டி சேர்ந்துவிடும். இதனை தவிர்க்க அரிசியில் சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் அரிசி விரைவில் கெட்டுப்போகாது.

மிளகாய் பொடி மற்றும் மஞ்சள் பொடியிலும்கூட சிறிதளவு உப்பைக் கலந்துவைத்தால் வண்டுகள் அண்டாது.

ப்பு கலந்த நீரில் தக்காளியை போட்டுவைத்தால் தக்காளி 2 நாட்கள் வரை கெட்டுப்போகாது.

தேங்காய் எண்ணெய் நீண்டகாலம் பாதுகாக்க சில உப்பு கற்களை போட்டுவைத்தால் போதும்.

மோர் மூன்று நாட்கள் புளிக்காமல் இருக்க உப்பும், இஞ்சியும் கொஞ்சம் சேர்த்தால் போதும்.

து மட்டுமா? உப்பின் வேறு சில பயன்களை பாருங்கள்.
உப்பு நீரில் பாகற்காயை வெட்டிப்போட்டு அதன்பிறகு பிழிந்து கூட்டு வைத்தால் கசப்பு இருக்காது.

கொதிக்கும் நீரில் சிறிதளவு உப்பைப் போட்டால் தண்ணீர் விரைவில் சூடாகும். காய்கறிகளும் சீக்கிரம் வேகும். அத்துடன் காய்கறிகளின் சத்துக்களும் வீணாகாது.

 காய்கறிகள்
காய்கறிகள்

தே போல் கீரைகளை வேக வைக்கும்போது உப்பு நீரில் கழுவிய பின்னர் கீரையை வேக வைத்தால் அதன் நிறமும், சுவையும் மாறாது.

ண்ணெய்யை காயவைக்கும்போதே தூள் உப்பை சிறிதளவு போட்டால் காய்கறிகள் வதக்கும்போது அதிக எண்ணெய் தேவையில்லை.

கிழங்குகளை உப்புக் கரைத்த நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்த பிறகு அடுப்பில் வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

குளிர்ந்த உப்பு நீரில் காலிபிளவரை சிறிது நேரம் முக்கிவைத்தால் அதில் உள்ள புழுக்கள் நீங்கிவிடும்.

த்தியின் கூர்முனையை உப்பில் அழுத்தி எடுத்தால் மீன், மாமிசத்தை சுலபமாக நறுக்கலாம்.

மீன் கழுவிய பின்னர் வாடை போகவில்லையா? கவலை வேண்டாம், சிறிது உப்பை எடுத்துக் கையில் தேய்த்து கழுவினால் மீன் வாடையும் போய்விடும்.

பாத்திரத்திங்களின் வெளிப்பக்கம் உப்பை தடவி ஊறவைத்து விட்டு பின்னர் தேய்த்து கழுவினால் பாத்திரங்களில் படிந்திருக்கும் கரிகறை  எளிதாக நீங்கும்.

இதையும் படியுங்கள்:
பூண்டு சாதம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!
உப்பு

வாணலியில் நிறைய எண்ணெய் கறை படித்திருந்தால், அதில் சிறிதளவு உப்பை சேர்த்து நன்றாக சூடாக்கிவிட்டு, அந்த உப்பில் அழுத்தி துடைத்து விடுங்கள். அழுக்கு நீங்கி விடும்.

மையல் அறையில் மற்றும் ‘பீரோ’க்களின் அடியில் எறும்புத் தொல்லை இருந்தால் உப்பு தூளை தூவி வையுங்கள்.

சிறிதளவு உப்பை ஒரு துணியில் கட்டி அதனை மண்ணெண்ணெய் ஸ்டவ்க்குள் போட்டுவிடுங்கள். அப்படி செய்தால் ஸ்டவ் நன்றாக எரியும். பாத்திரங்களில் அதிகம் கரி பிடிக்காது.

இப்படி எத்தனையோ விதங்களில் உப்பு நமக்குப் பயனளிக்கிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com