

இன்றைய அவசரமான வாழ்க்கை முறையில், சுவையானதும் ஆரோக்கியமானதும் ஆன ஸ்நாக்ஸ் தேவை அனைவருக்கும் இருக்கிறது. அதே நேரத்தில், அதிக நேரம் எடுத்துக்கொள்ளாத உணவுகளைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். இந்த நிலையில், உலகம் முழுவதும் புகழ்பெற்ற இத்தாலிய உணவுகள், எளிய பொருட்களிலும் குறைந்த நேரத்திலும் தயாராகும் தன்மையால் அனைவரையும் கவர்கின்றன. குறிப்பாக வெஜ் விரும்பிகளுக்கான இத்தாலிய க்விக் ஸ்நாக்ஸ், வீட்டிலேயே சுலபமாக செய்து சுவைக்க ஏற்றவையாக இருக்கின்றன. அத்தகைய 5 சுவையான, வேகமாக தயாராகும் இத்தாலிய வேஜ் ஸ்நாக்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
இத்தாலிய கார்லிக் பிரெட்: இது மொறுமொறுப்பு + மணம் கொண்டது. இதை செய்ய
தேவையானவை:
பிரெட் ஸ்லைஸ் _4
வெண்ணெய் _2 டீஸ்பூன்
நறுக்கிய பூண்டு_ 4 டீஸ்பூன்
Mixed herbs_ ½ டீஸ்பூன்
Salt – ஒரு சிட்டிகை
செய்முறை: வெண்ணெய் + பூண்டு + herbs கலந்து கொள்ளவும். பிரெட் மீது தடவி, தவா அல்லது ovenல் toast செய்யவும். சூடாக பரிமாறவும்.
கப்ரெஸே ஸ்க்யூவர்ஸ் (Caprese Skewers): இதை சமைக்க தேவையில்லை. இதற்கு
தேவையானவை:
செர்ரி தக்காளி_10 முதல் 12
Mozzarella cheese balls_ 10 முதல் 12
துளசி (Basil) இலை_ 10 முதல் 12
Olive oil _1 டீஸ்பூன்
Pepper – ¼ tsp
செய்முறை:
ஸ்டிக்/டூத் பிக்கில் தக்காளி, சீஸ், துளசி இலை செருகவும். மேலே olive oil துளியிட்டு பரிமாறவும்.
சீஸ் & வெஜி புருஷெட்டா (Bruschetta): இது தேநீர் நேர ஸ்நாக். இதை செய்ய
தேவையானவை:
Bread slices _ 4
தக்காளி (நறுக்கியது)_ ½ கப்
Capsicum (நறுக்கியது) _ ¼ கப்
Cheese _ ½ கப்
Olive oil – 1 tsp
Salt & pepper – ¼ tsp
செய்முறை: Bread toast செய்யவும். மேலே காய்கறி கலவை + cheese போடவும். Pan இல் சீஸ் உருகும் வரை சூடாக்கவும்.
மினி பீட்சா (Mini Veg Pizza): குழந்தைகள் விரும்பும் ஸ்நாக்
தேவையானவை:
Bread / chapathi base _ 4
Pizza sauce _4 டீஸ்பூன்
Veg toppings _ ½ கப்
Mozzarella cheese _ ¾ கப்
Oregano / Chilli flakes – ½ tsp
செய்முறை: Base மீது sauce தடவவும். Veg toppings + cheese போடவும். 8 முதல் 10 நிமிடம் pan ல் சுடவும்.
சீஸ் ஸ்டஃப்டு மஷ்ரூம் (Cheese Stuffed Mushroom): இது புரோட்டீன் நிறைந்த ஸ்நாக்
தேவையானவை:
Button mushroom _8 முதல் 10
Cream cheese / grated cheese _ ½ கப்
Pepper _ ¼ ஸ்பூன்
Butter _1 _டேபிள்ஸ்பூன்
Salt – ஒரு சிட்டிகை
செய்முறை: Mushroom stem நீக்கி உள்ளே cheese நிரப்பவும். Butter தடவி panல் grill செய்யவும். Pepper தூவி பரிமாறவும்.
இந்த 5 இத்தாலிய வேஜ் க்விக் ஸ்நாக்ஸ் — குறைந்த நேரத்தில், குறைந்த பொருட்களில், வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான உணவுகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.