ஜம்முன்னு ‘ஜவ்வரிசி ஜெல்லி அல்வா’ சிம்பிளா செய்யலாம் வாங்க!

ஜவ்வரிசி ஜெல்லி அல்வா
ஜவ்வரிசி ஜெல்லி அல்வா

ஜவ்வரிசி உடலில் எனர்ஜி வருவதற்கு மிகவும் உதவுகிறது. இதில் இருக்கும் பொட்டாசியம், ஆரோக்கியமான உடலுக்கு வழிவகுக்கிறது, கேல்சியம் எலும்பை வலுப்படுத்துகிறது, இது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது, இதில் இருக்கும் விட்டமின் மற்றும் ஃபோலேட் கர்பமான பெண்களுக்கும், பிறக்க போகும் குழந்தைக்கும் நல்லதாகும். இது மிகவும் எளிதாக ஜீரணம் ஆகக்கூடியதாகும். அத்தகைய ஜவ்வரிசியை வைத்து சட்டுன்னு ஒரு அல்வா ரெசிப்பி பார்த்துடலாம் வாங்க.

ஜவ்வரிசி ஜெல்லி அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி -1/2 கப்.

பீட்ரூட் ஜூஸ் சிறிதளவு.

ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.

சக்கரை -3/4 கப்.

நெய்- 5 தேக்கரண்டி.

முந்திரி-10

உப்பு-1 சிட்டிகை.

ஜவ்வரிசி ஜெல்லி அல்வா செய்முறை விளக்கம்:

முதலில் ½ கப் ஜவ்வரிசியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். இப்போது பேனில் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு ஜவ்வரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலந்து விடவும்.

அல்வா நிறத்துக்காக பீட்ரூட் ஜூஸ் சிறிது சேர்த்துக்கொள்ளவும். ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் போட்டு நன்றாக கலக்கவும். இப்போது 3/4 கப் சக்கரை சேர்த்து நன்றாக கிண்டவும்.

சக்கரை கரைந்ததும் 5 தேக்கரண்டி நெய் ஊற்றி கலந்ததும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக முந்திரி 10 சேர்த்து நெய்யில் பொன்னிறமாக வறுத்து இத்துடன் சேர்த்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
இந்த 5 உணவுகளை காலையில் மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்… மீறி சாப்பிட்டா? 
ஜவ்வரிசி ஜெல்லி அல்வா

அல்வா பதத்தில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி ஆற விடவும். அல்வா நன்றாக ஆறியதும், சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி பரிமாறவும். இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

நமக்கும் நேரம் எடுக்காது சட்டுன்னு செஞ்சிடலாம். நீங்களும் இந்த சுவையான ஜவ்வரிசி ஜெல்லி அல்வாவை வீட்டிலேயே செஞ்சி பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com