ஜவ்வரிசி வடை!

ஜவ்வரிசி வடை
ஜவ்வரிசி வடை
Published on

-சுரேஷ்.

தேவையானவை:

ஜவ்வரிசி ஒரு கப்

அரிசி மாவு அரை கப்

பொரிகடலை கால் கப்

உருளைக்கிழங்கு 2

ஜீரகம் 1 ஸ்பூன்

மிளகு 1 ஸ்பூன்

பச்சைமிளகாய் 2

இஞ்சி சிறு துண்டு

கருவேப்பிலை

கொத்தமல்லி தேவைக்கு

உப்பு தேவைக்கு

எண்ணெய் ( கடலை எண்ணெய் பெஸ்ட்)

#செய்முறை

ஒரு கப் ஜவ்வரிசி யை நன்கு தண்ணீர் விட்டு 4-5 மணிநேரம் ஊற வைத்து நன்றாகத் தண்ணிரை வடித்து பிழிந்து எடுத்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்!

உருளைக் கிழங்கை நன்கு வேகவைத்து பிசைந்து ஜவ்வரிசி மாவோடு சேர்த்துக் கொள்ளவும் !

அந்தக் கலவையோடு , பச்சைமிளகாய், இஞ்சியைப் பொடிப் பொடியாய் நறுக்கிச் சேர்க்கவும், ஜீரகம் ,மிளகு இடித்துச் சேர்க்கவும் ! தேவையான உப்பு சேர்க்கவும்! பின் பொரிகடலையை நறநறவென அரைத்து, அதோடு அரிசி மாவு சேர்த்து அந்தக் கலவையை இதில் கலக்கவும் ! கருவேப்பிலை கொத்தமல்லி பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்!

கொஞ்ச கொஞ்சமாய்த் தண்ணீர் தெளித்து நன்கு கலந்து கொள்ளவும்

வெங்காயம், அ முட்டக்கோஸ் துருவிக் கூடச் சேர்க்கலாம்!

( மாவு கெட்டியாக பருப்புவடைக்கு இருப்பது போல இருக்கணும்)

வாணலியில் எண்ணெய் விட்டு கொதித்தவுடன் கையில் எண்ணெய் தேய்த்து இலை அல்லது பிளாஸ்டிக் கவரிலோ(எகா:ஆவின் பால்பாக்கெட்) தட்டி பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்!

ஜவ்வரிசி வடை தயார்

பொரிகடலை/பொட்டுக்கடலை/உடைத்தகடலை போடுவதால் க்றிஸ்ப்நெஸ் இருக்கும்!

அரிசி மாவு சேர்ப்பதால் எண்ணெய் குடிக்காது!

சாப்பிட்டு விட்டுச் சொல்லவும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com