ஜவ்வரிசி வடை: ஒரு சுவையான, மொறுமொறுப்பான சிற்றுண்டி செய்முறை!
ஜவ்வரிசி வடை, ‘சபூதானா வடை’ என்றும் அழைக்கப்படும். இது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்நேக்ஸ் வகையாகும். இதை தயாரிப்பது மிகவும் எளிது. சாப்பிடுவதற்கு மொறுமொறுப்பாகவும் சுவையானதாகவும் இருக்கும். ஜவ்வரிசி, உருளைக்கிழங்கு மற்றும் சில மசாலா பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த வடை எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒரு சுவையான உணவாகும். இந்த பதிவில் ஜவ்வரிசி வடை எப்படி செய்வது என்பதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1 கப் ஜவ்வரிசி (சபூதானா)
1/2 கப் வேகவைத்த, தோலுரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு
1/4 கப் வெங்காயம், நறுக்கியது
1/4 கப் பச்சை மிளகாய், நறுக்கியது
1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/4 டீஸ்பூன் சீரகம் தூள்
1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை
1/4 டீஸ்பூன் கொத்தமல்லி தழை, நறுக்கியது
உப்பு, சுவைக்கேற்ப
எண்ணெய், பொரிக்க
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை 30 நிமிடங்கள் தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும். பின்னர் ஒரு கிண்ணத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கை போட்டு மசித்து கொள்ளுங்கள்.
மசித்த உருளைக்கிழங்கில், ஊற வைத்த ஜவ்வரிசி, வெங்காயம் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், சீரகத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவையை சிறிய வடைகலாகப் பிடித்து, வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். வடையில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்க, அவற்றை கிச்சன் பேப்பர் மீது வைக்கவும்.
அவ்வளவுதான் வேற லெவல் சுவையில் ஜவ்வரிசி வடை தயார். இது சூடாக சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும். இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
குறிப்புகள்: ஜவ்வரிசி வடை தயாரிப்பதற்கு முன் ஜவ்வரிசியை நன்றாகக் கழுவ வேண்டும். ஜவ்வரிசி விரைவாக ஊறுவதற்கு சூடான நீரில் ஊற வைக்கவும். வடைகள் மொறுமொறுப்பாக வருவதற்கு அதிக எண்ணெயில் போட்டு பொரிக்கவும். நீங்கள் விருப்பப்பட்டால் இதில் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். வடைகளை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்தால் 3-4 நாட்கள் வரை கூட கெட்டுப் போகாமல் இருக்கும்.