ஜில் ஜில் ஜிகிர்தண்டா செய்யலாம் வாங்க!

ஜிகிர்தண்டா
ஜிகிர்தண்டா

வெளியே போய் விட்டு வந்தால் நம் நாக்குகள் ருசியான பானம் அருந்த விரும்பும். குழந்தைகள் என்றால் கேட்கவே வேண்டாம் . ஜூஸ் கேட்டு பிடிவாதம் செய்வார்கள். ஐஸ் போட்டு ஜில்லுன்னு அதே நேரத்தில் சத்தான பானம் தந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு சரியான சாய்ஸ் மதுரை பேமஸ் ஜில் ஜில் ஜிகிர்தண்டாதான். மதுரை என்றால் மீனாட்சி அம்மனுக்கும், மல்லிகைப் பூவுக்கும் பிரபலம் என்று இருந்த நிலையில் சுவையான ஜிகிர்தண்டாவும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

இந்த ஜிகிர்தண்டாவை அறிமுகப்படுத்தியவர்கள் 14-ம் நூற்றாண்டில் மதுரையை சில காலம் ஆண்ட சுல்தான்களாக இருக்கலாம் என்ற கருத்து உள்ளது . எப்படியோ ஜிகர்தண்டா இன்று மதுரையின் பெருமைக்குரிய ஓர் அடையாளமாக மட்டுமல்லாமல் தமிழர்கள் விரும்பும் பானமாக மாறியுள்ளது. விலை சற்று கூடுதல் எனினும் அதன் சுவையால் அனைவரும் ஒரு முறையாவது சுவைக்க வேண்டும் என்ற ஆவலைத் தருகிறது. காலத்திற்கு ஏற்ப ஜிகர்தண்டா தயாரிப்பிலும் மாற்றங்கள் வந்திருக்கின்றன. பாரம்பரிய முறையுடன் இப்போது சுவைக்காக பாசந்தி பால்கோவா போன்றவற்றை சேர்க்கிறார்கள். சிலர் பாசந்தி போன்ற இனிப்புப் பொருட்களைச் சேர்க்கிறார்கள். இருந்தாலும் “ஜிகர்' என்றால் 'இதயம்'  'தண்டா' என்றால் 'குளிர்”  எனப் பொருள்தரும் ஜிகர்தண்டாவின்   அடிப்படை விஷயங்கள் ஒன்றுதான்.

ஜிகிர்தண்டா
ஜிகிர்தண்டா

சரி... இப்போது வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய ஜிகிர்தண்டாவின் செய்முறையைப் பார்ப்போமா?

தேவையானவை:

பாதாம் பிசின் – 5 (சிறு துண்டுகள்)

சர்க்கரை – 1 கப்

பால் – 1 லிட்டர்

ஐ ஸ்கிரீம் – 2 கப்  வென்னிலா  அல்லது நீங்கள் விரும்பும் ப்ளேவர்

நன்னாரி  சர்பத் – 2 ஸ்பூன்

ஜவ்வரிசி – 1 சிறிய கப்

 செய்முறை:

முதலில் பாதாம் பிசினை சுத்தமாகக் கழுவி முதல் நாள் இரவே தண்ணீரில் சுமார் எட்டு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறிய பாதாம் பிசின் ஜெல்லி மபவள் மிருதுவாக அளவில் பெரியதாக மாறி இருக்கும் . ஜிகிர்தண்டாவின் முக்கியப் பொருளே இந்த பாதாம் பிசின்கள்தான். இவை கடைகளில் எளிதாக கிடைக்கும். ஜிகர்தண்டா செய்யத் தேவையான பாலை எடுத்து வேண்டிய அளவு சர்க்கரையைச் சேர்த்து கரையும் வரை நன்றாக சுண்டக்  காய்ச்ச வேண்டும். பாதாம் பிசின் மற்றும் பாலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்  குளிரவிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உலர் பழங்களை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல; ஏன் தெரியுமா?
ஜிகிர்தண்டா

ஜவ்வரிசியை நன்றாக கழுவிவிட்டு தேவையான பால் சேர்த்து வேக வைத்து ஆற வைக்க வேண்டும். ஒரு கப் ஐஸ்க்ரீமுடன் பாலைக் கலந்து வைக்கவும். இப்போது தேவைப்படும்போது   ஒரு கண்ணாடி அல்லது விருப்பமான தம்பளரில் குளிர்ந்த பாதாம் பிசினை சிறிதளவு இட்டு  வெந்த ஜவ்வரிசியையும் சுண்டக் காய்ச்சிய பால்  பாலை அடுத்தடுத்து அடுக்குகளாக ஊற்றி அதன் மேல் சிறிது நன்னாரி சர்பத் மற்றும் ஜஸ் கிரீமையும் சேர்த்தால் குளிர்ச்சியான ஜிகர்தண்டா தயார். உடலுக்கு குளிர்ச்சியுடன் புரதச்சத்தும் நிறைந்த ஜிகிர்தண்டாவை இனி நீங்களும் வீட்டிலேயே செய்யலாம்.  

குறிப்பு - பாதாம் பிசினுக்குப் பதிலாகக் கடற்பாசியையும் பயன்படுத்தலாம். இதில் அவரவர் விரும்பும் வகையில் பால் மற்றும் சர்பத் ஐஸ் கிரீம்களை சேர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com