
சமையலுக்கு காய்கறிகளை நறுக்கி விட்டு, தோல்களை குப்பையில் எறிந்து விடுவது பலரது வழக்கம். காய்கறி, பழத்தோல்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைய உள்ளதால், அவற்றை வீணாக்காமல் எப்படி சமையலுக்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
* உருளைக்கிழங்கு, வாழைக்காய்களை தோல்களோடு பொரியல், கூட்டு, சாம்பார் என்று செய்யலாம். அவற்றில் உள்ள வாய்வுக்கு தோல்களே மருந்தாகின்றன.
* வேகவைத்த வாழைக்காய் தோலை நறுக்கி, வதக்கி தாளித்து விட்டால் தொட்டுக்கொள்ள சைட் டிஷ் தயார்.
* ஆரஞ்சு பழத்தோலை நறுக்கி, புளிக்குழம்பு செய்யலாம். உளுந்தம் பருப்பு, வற மிளகாயுடன் ஆரஞ்சு பழத்தோலை சேர்த்து, துவையல் அரைக்கலாம்.
* வெண்டைக்காய், கத்தரிக்காய், கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய் போன்றவற்றை தோல் நீக்காமல் பொரியல், கூட்டு, சாம்பார் சமைக்கலாம்.
* பீர்க்கங்காய் தோலில் உளுந்தம் பருப்பு, வற மிளகாய் சேர்த்து துவையல் செய்யலாம்.
* தர்பூசணி பழ தோலுடன் உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம், தேங்காய் சேர்த்து கூட்டு செய்யலாம்.
* பீட்ரூட் கேரட் தோல்களில் கூட்டு செய்யலாம்.
காய்கறி, பழத் தோல்களை கால்நடைகள் விரும்பி சாப்பிடுகின்றன. எனவே அவற்றிற்கும் கொடுக்கலாமே. தோல்கள் குப்பை தொட்டிக்கு போகாதல்லவா.