கடாய் கத்திரி சோறு செஞ்சு பாருங்க நாக்கில் சும்மா எச்சில் ஊறும்!

கடாய் கத்திரி சோறு ...
கடாய் கத்திரி சோறு ...www.youtube.com
Published on

த்திரிக்காய் நிறைய பேருக்கு சாப்பிட பிடிக்காது. அப்படி இருப்பவர்களுக்கெல்லாம் நல்லா எண்ணையிலே பொரிச்ச கத்தரி கடாய் சோறு செஞ்சி கொடுத்து பாருங்க. இன்னும் வேணும்னு கேட்பாங்க.முக்கியமாய் குழந்தைகளுக்கு இப்படி செஞ்சி கொடுத்தால் நல்லா சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

குழம்புத் தூள்- 2 தேக்கரண்டி.

உப்பு- ½ தேக்கரண்டி.

கருவேப்பிலை- கொஞ்சம்.

பூண்டு- 20.

கத்திரிகாய்-1/4கிலோ.

எண்ணை-2 தேக்கரண்டி.

வடித்த சாதம்-1கப்.

கத்திரி கடாய் சோறு செய்முறை விளக்கம்:

முதலில் கடாயை எடுத்து அதில் குழம்புத் தூள் 2 தேக்கரண்டி, உப்பு ½ தேக்கரண்டி, நாட்டு பூண்டு இடித்து 20 சேர்த்துக்கொள்ளுங்கள். அத்தோடு கருவேப்பிலை கை நிறைய அள்ளி போட்டுக்கொள்ளுங்கள். அதில் ¼ கிலோ கத்தரிக்காயை நல்லா நீளமாகவும் மெலிதாகவும் வெட்டி சேர்த்து நன்றாக கைகளால் கிளறிக்கொள்ளவும். இப்போது அதில் 2 தேக்கரண்டி எண்ணை சேர்த்து அடுப்பை ஆன் செய்து கடாயை அடுப்பில் வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
அஹமதாபாத்தில் சுற்றி பார்க்க அற்புதமான 8 இடங்கள்!
கடாய் கத்திரி சோறு ...

கத்திரிக்காய் வறுவல் மணம் வீடு பூரா அடிக்க ஆரமிச்சிடும். இருந்தாலும் நல்லா கத்தரிக்காயை வறுத்தால் தான் சுவையும் நல்லாயிருக்கும். நன்றாக வறுத்த பின்பு அதில் 1கப் வடிச்ச சாதத்தை போட்டு நல்லா கிண்டி இறக்கிடுங்க. இப்போ இதை உருட்டி சாப்பிட்டால் சுவை வேற லெவல்ல இருக்கும். நீங்களும் வீட்டில் செஞ்சி பார்த்துட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com