
– மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்
தேவை:
கடலைமாவு-1கப்,
பொன்னிறமாக வறுத்த கம்பு மாவு-1/4 கப்,
குதிரைவாலி அரிசி மாவு-4டேபிள்ஸ்பூன்
நசுக்கிய இஞ்சி பூண்டு-1டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கோங்குரா கீரை-1/2 கப்
கரகரப்பாக பொடித்த, வரமிளகாய்-1டேபிள்ஸ்பூன்,
வெள்ளை எள்-1டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய சி வெங்காயம்-1/2 கப்,
கரகரப்பாய் பொடித்த தனியா விதை-1டேபிள்ஸ்பூன்,
உப்பு, சமையல்சோடா-1/4டீஸ்பூன்,
நீர்க்கக் கரைத்த மோர்– 1¼ கப்,
சமையல் எண்ணைய்–தேவைக்கு.
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு, உப்பு, நறுக்கிய கோங்குரா கீரை,எள்,தனியா போட்டு க் கிளறி,பின் தொடர்ந்து மாவு வகைகளை ப் போட்டு வறுத்து, மோர் விட்டு கிளறவும்.கெட்டியாக மாவு வெந்து உருண்டு வரும் போது,சமையல்சோடா கலந்து இறக்கவும். மாவை ஒரு எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ,முக்கோண வடிவில் நறுக்கி வைக்கவும். பின் அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்த முக்கோணங்களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். கரகரப்பானதும் எடுத்து சாஸ் வைத்து பரிமாறவும்.