காஞ்சிபுரம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டு, அதற்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் இட்லி. வழக்கமான இட்லியை விட கூடுதல் சுவை நிறைந்தது.
நெய்யில் வறுத்து சேர்த்த மிளகு,சீரகம் ,மற்றும் சுக்கு அதன் நறுமணத்துடன் மிக அருமையாக இருக்கும். கோவிலில் தயார் செய்யும் பொழுது மூங்கில் தட்டில் உலர்ந்த மந்தாரை இலை வைத்து இட்லியை வேக வைப்பார்களாம், மந்தாரை இலையின் நறுமணத்துடன் கூடிய அதன் சுவை அலாதியாக இருக்கும்.
அதை சூடாக மந்தாரை இலையில் பரிமாறும் பொழுதும் அற்புதமாக இருக்கும். சுக்கு மிளகு சேர்ப்பதால் செரிமானத்திற்கும் சிறந்தது..நமக்கு விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடலாம்...
தேவையான பொருட்கள்:
1.இட்லி அரிசி- 1 கப்
2.பச்சரிசி - 1 கப்
3. உளுந்தம்பருப்பு - 1/2 கப்
4. வெந்தயம் - 1/2 ஸ்பூன்
5.உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
1.மிளகு தூள்- 1/2 ஸ்பூன்
2.சீரகம் தூள்- 1/2 ஸ்பூன்
3.சுக்கு தூள் - 1/4 ஸ்பூன்
4.கருவேப்பிலை - சிறிது
5.முந்திரிபருப்பு - தேவையான அளவு
6.நெய் - 2 ஸ்பூன்
செய்முறை ;
1.அரிசிகள் மற்றும் கழுவி 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. பின் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் நன்கு அரைத்து உப்பு சேர்த்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
3. பின் நெய்யில் மிளகுதூள், சீரகதூள்,சுக்குத்தூள் சேர்த்து தாளித்து மாவில் சேர்க்கவும்.
4.பின் நெய்யில் முந்திரிபருப்பு, கருவேப்பிலை தாளித்து மாவில் சேர்க்கவும்.
5.பின் இட்லி தட்டில் வேக வைக்கவும்.
6. சூடான சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார்.